உயிரற்ற காகிதம்
உணர்வுகளை தாங்கி வந்து
உறவுக்கார( தபால் மாமா)மாமா மூலம் ஊருக்கெல்லாம் கொடுத்த தினம்!கடவுச்சொல்லும் இல்லை!
இரகசியமும் இல்லை!!.
- நாகராஜ்,
=======================
அஞ்சலுக்கு என்...
கண்ணீர் அஞ்சலி
- சாய்
========================
கனவைச்சுமந்த கவிதை ( அஞ்சல்)
தாத்தாவின்
கையெழுத்தில்
தவழ்ந்த அன்பு,
தாயின் மடலில்
நிறைந்த ஆறுதல்!
தபால்காரர்
வருகையில்
தெருவே விழித்தது,
தபால் பெட்டிக்குள்
எத்தனையோ
கனவுகள் உறங்கியது!
கடிதத்தை கண்டே
முகங்கள்
மலர்ந்தன,
மூடிய உறைக்குள்ளே
உறவுகள் வளர்ந்தன!
காலங்கள் மாறலாம்,
கருவிகள் மாறலாம்,
கடிதம் தந்த உணர்வுகள்
என்றும் மாறுமா?
- மலர்விழி
=====================
அஞ்சல் கொஞ்சம் கொஞ்சமாக...
சிவப்பு நிறப் பெட்டிகள் அன்று எங்கும்
சிறிய வாயதில் கரு நாவும் தொங்கும்
உவக்க வைக்கும் பல அழைப்புகள் வரும்
உயிர் எடுக்கச் சில செய்திகள் இருக்கும்
தவிப்பு அதைத் தணிக்கும் சிலவாம் கடிதம்
" தனித்திருப்பேன்" என "ஜீவனாம்சம்" கேட்கும்
குவியும் வாழ்த்துகள் பொங்கல் நன்னாளில்
கொடுத்த கடன் கேட்டுத் திட்டுவார் மடலில்
கவிதை, கதை என ஆவலாய் அனுப்பப் படும்
காரணம் ஏதுமின்றி எல்லாம் திரும்பி வரும்
தவம் கிடப்போம், வரும் தபால்காரர் சைக்கிள்
தகவல் படித்துச் சொல, தக்காளி அவர் பையில்
புவியிது பெரிதாம் அன்றைய தோற்றம்
புரியாத வேகம் இன்றைய பரிமாற்றம்
இவை எல்லாம் மெல்லக் குறைந்து மறையுமோ!
என் தலைமுறை இரண்டும் கண்டதால் இரையுதோ?
__. குத்தனூர் சேஷுதாஸ் 9/10/2026
========================
No comments:
Post a Comment