•וווווווווו
*மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கம்*
*மாபெரும் வெற்றி ஈட்டிய மூன்றாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள்*
*ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிய மகாகவி பாரதி தமிழ்ச் சங்க உறுப்பினர்கள்*
•וווווווווו
*மூன்றாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் விவரணம்*
26 ஜூலை 2026, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நமது பல் பயன்பாட்டு பெருவரங்கம் உறுப்பினர்களின் வருகையால் களை கட்டத் துவங்கியது. அரங்கில் போடப்பட்டிருந்த 130 இருக்கைகளும் மள மளவென நிரம்பத் துவங்கின. நுழை வாயிலில் பன்னீர் தெளித்து, சந்தனம் கொடுத்து நமது வரவேற்புக் குழு முகமன் கூறி வந்த உறுப்பினர் அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்றது.
153 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இருக்கின்றனர்.
சரியாக ஒன்பதரை மணிக்கு ஆண்டு விழா துவங்கியது. மங்கலகரமான குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில்,
*திரு. விஜய் கணேஷ், திரு. சிவகுமார். திருமதி. பிரேமா பத்ரி நாராயணன் திருமதி. ஜெயலக்ஷ்மி திருமதி. அமுதவல்லி*
ஆகியோர் குத்து விளக்கை ஏற்றினர்.
முதலில், நிகழ்ச்சிகளின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப் பட்டது.
செல்வன். இர்மான் அழகு தமிழில் வரவேற்புரை நல்கினார்.
அதன் பிறகு, நமது சங்க பெருமைகளை விளக்கும் குத்தனூர் சேசுதாஸ் (கணேசன் ஐயா) அவர்கள் எழுதிய கவிதை ஒன்றினை திருமதி வித்யா சிவகுமார் அவர்கள் அழகாக வாசித்தார்.
அடுத்த நிகழ்ச்சியாக கண் கவரும் பரதம் ஆடி நமது நடன மணிகள் அரங்கத்தினரை மகிழ்வித்தனர். நடன ஆசிரியராக இருக்கும் நம் தமிழ்ச் சங்க உறுப்பினர் *திருமதி வித்யா லட்சுமி* அவர்கள் கொடுத்த பயிற்சியினால் மற்றும் தங்களது முயற்சியினால் நமது உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக ஆடி அனைவரையும் உற்சாகப் படுத்தினர். தமிழின் மேன்மையை பறைசாற்றும் பாடல்களுக்கு மிக அருமையாக அவர்கள் பரதம் ஆடி அனைவரின் கருத்தையும் கவர்ந்தார்கள்.
நல்லதொரு நாட்டியத்தை கண்டு மகிழ்ந்த கையோடு உறுப்பினர்களின் செவிகளுக்கு ஒரு நல் விருந்து காத்துக் கொண்டிருந்தது. ஆம் ... அதிரடியான சிறார்கள் ப(சு)ட்டிமன்றம் துவங்கியது.
*பட்டிமன்ற தலைப்பு:*
*சிறார்களுக்கு அதிக மகிழ்ச்சி தருவது.. •உள்ளரங்க விளையாட்டுகளே! •வெளியரங்க விளையாட்டுகளே!*
நடுவராக *செல்வன் வருண்* மிகச் சிறப்பாக பட்டிமன்றத்தை வழிநடத்தினார்.
உள்ளரங்க அணியில்
*அகரன், சந்தோஷ், ஆராதனா* ஆகியோர் வலு சேர்த்தனர்.
வெளி அரங்க அணியில்
*நிதர்ஷனா, லக்ஷித், சாதனா ஸ்ரீ* ஆகியோர் தடம் பதித்தனர்.
இந்த ஆறு சிறார்களின் வாத பிரதிவாதங்கள் அரங்கத்தை அதிர வைத்தன. வருணின் நகை உணர்வோடு கூடிய சொல்லாடல்கள் அரங்கத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தின. மொத்தத்தில் இந்த பட்டிமன்றம் மாபெரும் வெற்றியை ஈட்டியது. பார்வையாளர்கள் அனைவரின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. எதிர்கால தமிழக பட்டிமன்ற மேடைகளில் இந்த சிறார்கள் நிச்சயம் தடம் பதித்து ஒளி வீசி முத்திரை பதிப்பார்கள் என்ற நம்பிக்கை மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்திற்கு உண்டு.
கர ஒலியால் அதிர்ந்த அரங்கத்தை மேலும் கலகலப்பாக மிக அருமையான கிராமிய நடனம் அரங்கேறியது. கண் கவர் கிராமிய நடனத்தால் பார்வையாளர்களின் உற்சாகம் அதிகரித்தது. பிரபு குமாரி அவர்களின் பயிற்சியில் நடனமணிகள் மிகச் சிறப்பாக ஆடினார்கள்.
அந்த உற்சாக வெள்ளத்தின் ஊடே, நமது இந்த மூன்று ஆண்டு பயணத்தின் *கடந்து வந்த பாதை* என்ற தலைப்பில் உதவித் தலைவர் திரு. தியாகராஜன் ஐயா அவர்கள் அருமையாக உரை நிகழ்த்தினார். தடம் பதித்த பயணம் என்று துவங்கி நாம் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளை பட்டியலிட்டதோடு, எதிர்கால நிகழ்ச்சிகள் பற்றி நமது திட்டங்களையும் குறிப்பிட்டுச் சொன்னார். இவற்றையெல்லாம் முன்னெடுக்க நிதியாதாரம் அவசியம் எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்தடுத்து சிறப்பான நிகழ்ச்சிகளால் அரங்கத்தை மகிழ்வித்து வந்த தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் அடுத்த நிகழ்ச்சி இனிதே துவங்கியது. ஆம் *இன்னிசை நிகழ்ச்சி துவங்கியது.* காதுக்கு இனிமையான பாடல்களை மிக அருமையாக நமது உறுப்பினர்கள் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். பாடியோர் விவரம்:
1. புத்தம் புது காலை :. *திருமதி. பிரதிமா செளத்ரி*
2. கண்ணன் வந்து பாடுகிறான்: *திருமதி. லதா கணேஷ்*
3. செந்தூரப் பூவே: *திருமதி. சுவாதி*
4. தமிழுக்கு அமுதென்று பேர்: *திருமதி. பிரதிமா செளத்ரி*
5.. நேற்று இல்லாத மாற்றம்: *குமாரி. நிவேதிதா*
6. தமிழே தமிழே (மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் என்ற பாடல் ஒலி நயத்தில் தலைவர் ஸ்ரீவி அவர்கள் எழுதிய பாடல்): *திரு. சாய் ராம்*
பாடிய அனைவரும் மிக மிக சிறப்பாக பாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தியது அரங்கத்தை மகிழச் செய்தது. இதில், நம் மேடையில் பிரதிமா, லதா, நிவேதிதா ஆகியோர் முதன்முறை பாடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
பின்னர், தலைவர் ஸ்ரீவி அவர்கள் உரை நிகழ்த்தினார். மூவர் முயற்சியால் சிறு விதையாக விழுந்த தமிழ்ச் சங்கம் இன்று ஆலமரமாக கிளைப்பரப்பி வளர்ந்திருப்பதை குறிப்பிட்டு, இதனை மேலும் பிரபலப்படுத்த நம் உறுப்பினர்கள் அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார். நமது youtube சேனலை பிரபலப்படுத்த அனைவரும் தவறாது சப்ஸ்கிரைப் செய்து கருத்துகளை பகிர்ந்து உதவ வேண்டும் என்று வேண்டுகோளையும் வைத்தார். நாம் தயாரித்திருக்கும் கலாட்டா காலனி திரைப்படத்தொடர் தொடர வேண்டுமானால் உறுப்பினர் அனைவரும் முழுமையான ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொன்னார்.
மேலும் நமது நிதி செயலர் சாய்ராம் ஐயா அவர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கியதை ஒட்டி நாம் எடுத்த பாராட்டு விழாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதிய உணவை அவர் அன்பளிக்கிறார் என்கின்ற தகவலை கூறி அவருக்கு நன்றி பாராட்டினார். உதவித்தலைவர் கூறியதை வழிமொழிந்து நிதி ஆதாரத்தை பலப்படுத்த உறுப்பினர்கள் உதவிட வேண்டும் என்று விண்ணப்பித்து உரையை நிறைவு செய்தார்.
அதன் பின் இன்னொரு சிறப்பான நடன நிகழ்ச்சி அரங்கேறியது. ஆடிய நடன மணிகள் அனைவரும் மிகச் சிறப்பாக ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்கள்.
மூன்று நடனங்களிலும் பங்கேற்ற நடன மாமணிகள்:
*நடனம் 1 – பரதம்*
திருமதி. வித்யாலட்சுமி
திருமதி. துர்கா சாய்ராம்
திருமதி. சிந்து
திருமதி.பிரபு குமாரி
திருமதி.சுஜாதா ஜெகன்
*நடனம் 2 – கிராமிய நடனம்*
திருமதி .மல்லிகா மணி
திருமதி.மல்லிகா
திருமதி.பத்மாவதி நரசிம்மா
திருமதி.விஜயகுமாரி சுகுமார்
திருமதி.ரமா வெங்கட்ராமன்
*நடனம் 3 – இந்தக் கால நடனம்*
திருமதி வித்யாலட்சுமி
திருமதி.துர்கா சாய்ராம்
திருமதி.சிந்து
திருமதி.பிரபு குமாரி
திருமதி.கிருத்திகா
திருமதி.பிருந்தா
திருமதி.சுஜாதா ஜெகன்
நடந்த நிகழ்ச்சிக்குப் பின் நமது சங்கத்தில் புதிதாக இணைந்துள்ள பிரபு அவர்கள் பல குரல்களில் பேசி அனைவரையும் அசத்தினார். பல திரை பிரபலங்கள் நமது சங்க நிகழ்ச்சிக்கு வருவதைப் பற்றி பேசுவது போல அமைந்திருந்த அந்த பல குரல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. இவரது திறமை நமது பாராட்டுதலுக்கு உரியது. அவருக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.
இதன் பின் ஆண்டு விழா நிகழ்ச்சியின் முக்கிய கட்டம் வந்தது. நமது சிறப்பு விருந்தினர் *திரு தாசரதி ஐயா* மேடைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டார். அவருக்கு நம் பாரதி தமிழ்ச் சங்க எழுத்தாளர்கள்/ கவிஞர்கள் எழுதிய எட்டு புத்தகங்கள் அடங்கிய புத்தகக் கட்டு அன்பளிக்கப் பட்டது, தலைவர் ஸ்ரீவி அவர்களால். நமது சிறப்பு விருந்தினர் திரு. வே. தாசரதி அவர்கள் பற்றிய அருமையான அறிமுக உரையை மலர்விழி ஆற்றிய பின் மிகச் சிறப்பானதொரு சிறப்பு உரையை திரு தாசரதி அவர்கள் வழங்கினார்கள்.
அதுவரை ஆரவாரமாக கைதட்டி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்த அரங்கமே நிசப்தத்தில் ஆழ்ந்தது. ஆங்கிலக் கலப்பு சிறிதும் இல்லாமல், ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல், தேன்மதுர குரலிலே, தெளிந்த நீரோடை ஓட்டம் போல, தெளிவான கருத்துக்களை மிக இயல்பாக அவர் எடுத்து வைத்த விதம் நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இவர் பேச்சைக் கேட்கையில் பாரதியின் *இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே* என்கின்ற வரிகளே நம் அனைவரின் மனதிலும் ஓடியது. தமிழின் பெருமையை, பாரதியின் பெருமையை, நம் சங்கத்தின் அருமையை, பாராட்டி பேசி நமது சங்கத்தின் செயல்பாட்டிற்கு உரமூட்டினார். அந்த 20 நிமிடங்களும் அரங்கம் மெய் மறந்து உட்கார்ந்திருந்தது. வளரும் மேடைப் பேச்சாளர்களுக்கு இவரது உரை ஒரு பாடமாக அமைந்திருந்தது.
பிறகு அவர் கையால் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அன்புப் பரிசாக நூல்கள் வழங்கப் பட்டன.
நிறைவு நிகழ்ச்சியாக, நிதிச் செயலர் சாய்ராம் ஐயா அவர்கள் நமது சங்கம் தயாரித்துள்ள *காமு சோமுவின் கலாட்டா காலனி* திரை நாடகத் தொடர் பற்றி விளக்க உரை நிகழ்த்தினார். தலைவர் ஸ்ரீவி அவர்கள் எழுதிய காமு சோமு எனும் நகைச்சுவை நாவலை ஒட்டி இந்த தொடர் எடுக்கப்படுவதை விளக்கினார். இந்த தயாரிப்பில் உதவிய
தயாரிப்புக் குழுவில் உள்ள, மலர்விழி,
தேவி அருண், அமுதவல்லி, சுல்தானா, ஸ்ரீவித்யா,
லட்சுமி நாராயணன், கார்த்திக் ஆகியோரின் பங்களிப்பை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இதைப் போன்ற திரை நாடகங்கள் தொடர உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் கோரினார். இந்தத் திரைத் தொடரில் விளம்பரம் செய்வதற்கான திட்டத்தை விவரித்தார். ஏற்கனவே இரண்டு விளம்பரங்கள் வந்திருக்கின்ற விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார். இவர் இதை விளக்கும் போதே, நமது சிறப்பு விருந்தினர் திரு தாசரதி ஐயா அவர்கள் தங்கள் நிறுவனத்தின் சார்பாக ஒரு விளம்பரம் தருவதாக கூறி நம்மை மேலும் உற்சாகப் படுத்தினார்.
அதன் பின்னர் சாய்ராம் அவர்கள் மேற்பார்வையில் நமது தயாரிப்புக் குழு தயாரித்த திரை நாடக தொடரின் டைட்டில் சாங் திரையிடப் பட்டது. மிகச் சிறப்பாக தயாரிக்கப் பட்டிருந்த காணொளி உறுப்பினர்களின் மகிழ்ச்சியை பல மடங்கு அதிகரித்தது. அவர்களின் உற்சாக கைத்தட்டல்களால் அரங்கம் நிறைந்தது.
சிறப்பான இந்த நிகழ்ச்சியின் நிறைவாக செல்வி யாழினி அவர்கள் நல்ல தமிழில் நன்றி உரை. கூறினார்கள்.
பின்னர் தேசியப்பண் இசைக்கப்பட்டு, நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
இந்த நிகழ்ச்சி ஓர் இமாலய வெற்றி அடைந்ததற்கு பங்கேற்பார்கள் ஏன் உற்சாக பயிற்சி மேற்கொண்ட விதமும், பொறுப்பாளர்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டு வழி நடத்திய விதமும் பாராட்டுக்குரியன. சிறார்களுக்கு பொறுப்பாளர்கள் கொடுத்த பயிற்சியினை ஒட்டி தங்கள் இல்லங்களில் பயிற்சி கொடுக்க உதவிய அவர்தான் குடும்பத்தாரும், கருத்தாலும் கரத்தாலும் உழைக்கின்ற நமது தமிழ் சங்க நிர்வாகிகளுக்கும் தன்னார்வலர்களுக்கும், அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவளித்து ஊக்கம் தரும் உறுப்பினர்களுக்கும் நமது இதயம் கனிந்த நன்றிகள்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட தொகுப்பாளினிகள் மலர்விழி மற்றும் பத்மாவதி இருவருக்கும் உளம் நிறை நன்றிகள். மிகச் சிறப்பாக இவர்கள் இருவரும் தொகுத்து வழங்கியது நம் அனைவரின் பாராட்டிற்கு உரியது. இருவருக்கும் மீண்டும் நமது நன்றிகள்🙏
இந்த நிகழ்ச்சியின் தரத்தை பார்த்து மகிழ்ந்த உறுப்பினர்கள் பலர் உடனடியாக நன்கொடை வழங்கி இருக்கிறார்கள். அவர்கள்:
ஸ்ரீகுமார், காமாட்சி, ஐயாசாமி - லதா தம்பதியினர், சதீஷ் - பத்மாவதி தம்பதியினர் திரு என்கின்ற திருமலை குமார் ஆகியோருக்கும் நமது நன்றிகள்.
ஒலி ஒளி அமைப்பிற்கு உதவிய சசிக்குமார் மற்றும் விஜய் கணேஷ் ஆகியோர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்.
நம் தமிழ்ப் பயணம் இனிதே தொடரட்டும் உங்கள் அனைவரின் ஆதரவோடும் உதவியோடும்.
நன்றி
*ஶ்ரீவி*
*தலைவர்*