நெகிழிப் பை தவிர்த்து (3, ஜூலை)...
மகிழ்ச்சியாம் குருதியின் தடையிலா ஓட்டம்
மாநகராட்சியும் கதை கதையாய் *சொல்லும்
துகிலாய் நெகிழி அது புவியைச் சூழ்ந்தது
தோழராம் தாவரம், மீன்,.. மூச்சு திணறுது
முகிலின் கொடையாம் நீரும் கெட்டது
மூடியுடன் வண்ண நெகிழியில் இட்டது
நெகிழியைத் தவிர்த்து சுற்றுச்சூழல் காப்போம்
நேற்றைய முன்னோராய் துணிப் பை எடுப்போம்.
* நெகிழியால் கழிவுநீர் தடைபடுதல்
__. குத்தனூர் சேஷுதாஸ் 3/7/2026
No comments:
Post a Comment