நற்சுனை 6
துண்டுக்கு என்ன விலை?/!
குளித்து துடைக்க
குட்டியாய் ஒரு துண்டு..
ஆயிரம் முறை
யோசித்து
ஆறு ரூபாய்க்கு
வாங்கினார் தாத்தா
ஆறு முறை யோசித்து
அறுபது ரூபாய்க்கு
வாங்கினார் அப்பா
ஆறு நிமிடங்கள்
யோசித்து
அறுநூறு ரூபாய்க்கு
வாங்கினான் மகன்
ஆராயமலே வாங்கப்படுகிறது
ஆயிரம் ரூபாய்க்கு!
மகனின் மகளுக்கு..
விலைவாசி ஏறியதால் இந்த விலையா?
குடும்பப் பொருளாதாரத்தின்
வளர் நிலையா?
நாகரீகம் வீசிய வலையா?
செல்ல மகள் அவள்!
குடும்ப பட்ஜெட்டில் துண்டுக்கு மட்டும் துண்டு விழவில்லையோ!! ??
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment