*நாடக விமர்சனம்: தேவியின் Alexa காமெடி நாடகம்*
ஶ்ரீ வித்யாவின் சொல் அலை பாட்காஸ்டில் அரங்கேறிய தேவியின் Alexa நாடகம், விஞ்ஞானத்துடன் நகைச்சுவையும் கலந்த ஒரு அற்புதமான படைப்பு. தேவி, ஶ்ரீ வித்யா, மற்றும் மகா ஆகிய மூன்று பன்முகத் திறமைசாலிகளின் ஒருங்கிணைந்த முயற்சி, இந்த நாடகத்தை கேட்போருக்கு ஒரு சிரிப்பு மற்றும் சிந்தனை விருந்தாக உள்ளது.
*கதையும் நகைச்சுவையும்*
தேவி, கவிஞராகவும், பட்டிமன்றப் பேச்சாளராகவும் மிளிர்ந்தவர், இந்த நாடகத்தின் மூலம் தன்னை ஒரு திறமையான கதாசிரியராகவும் நிரூபித்திருக்கிறார். Alexa-வை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நாடகம், நாம் அளிக்கும் கட்டளைகளை அது எப்படி புரிந்து செயல்படுகிறது என்பதை நகைச்சுவையாகச் சித்தரிக்கிறது.
*ஶ்ரீ வித்யாவின் இயக்கமும் அரங்கேற்றமும்*
கவிஞர், பாடகி, நடனமணி, மற்றும் மேடை நாடகக் கலைஞராக வலம் வரும் ஶ்ரீ வித்யா, சொல் அலை பாட்காஸ்ட் மூலம் இந்த நாடகத்தை அரங்கேற்றி, தனது இயக்கத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். பாட்காஸ்ட் என்ற ஒலி வடிவத்தில் நாடகத்தை உயிர்ப்பிக்க வேண்டிய சவாலை, ஶ்ரீ வித்யா தனது குரல் மாறுபாடுகளாலும், ஒலி வடிவமைப்பாலும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். Alexa-வின் பதில்கள் மற்றும் திறமைகளை விள்க்கும் காட்சிகள், நகைச்சுவையுடன் இயக்கப்பட்டு, கேட்போரின் கற்பனையில் காட்சிகளைத் தத்ரூபமாக உருவாக்குகின்றன. இவர் இப்படியே தொடர்ந்தால் அனைத்து அலை , கலைகளையும் தனதாக்கிக் கொண்டு விடுவார்.
*மகாவின் கரு மேலும் திரு கதாபாத்திரம்*
தொகுப்பாளினி, ஆசிரியர், கவிஞர், மற்றும் பட்டிமன்றப் பேச்சாளரான மகா, இந்த நாடகத்தில் ஒரு ஆண் கதாபாத்திரமாக நடித்து, தனது நடிப்புத் திறனையும் அசத்தலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இச்சூழலில்,
*Alexa விற்கு என் கட்டளை*
Alexa, இந்த மூன்று பெண்களின் பன்முகத் திறமைகளை சோசலிச முறையில் உடனடியாக மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கவும்
- தியாகராஜன்
============================================
அலெக்ஸாவும், அப்பாவும்
மூன்று தேவியரின் கூட்டாம்
இச் சதியை
முறைக்க வைக்கும் எனைப் போன்றோரை
சான்று குறுநாடகம் "அலெக்ஸாவும் அப்பாவும்"
சற்றும் தொய்விலை எங்கும், எவ்விதத்திலும்
ஆன்றோன் வள்ளுவன், வாளி, விரைந்த வாசுகி
அப்படியே மாறியது ஆண்களின் தலைவிதி
ஏன் இன்று எல்லாம் தலைகீழான நிலைமை?
எது எப்படியோ நாடகம் அருமை! அருமை!!
__. குத்தனூர் சேஷுதாஸ் 24/8/2025
-----------------------------------------
நேற்று இரவு நமது குழுவில் இந்த நகைச்சுவைக் குறு நாடகம் பதிவேற்றப்படும் முன், யூடிபில் காணக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த youtube லேயே என்னுடைய கருத்துரையை நான் பதிவேற்றி இருக்கிறேன்.
காமு சோமு நகைச்சுவை கதைகளைப் பற்றி நமது மகளிர் தரப்பிலிருந்து ஒருவேளை எதிர்வினை வருமோ என்ற ஓர் ஐயப்பாடு இருந்தது. ஆனால், இந்த நாடகத்தில் தேவி அருண் அவர்களின் கை வண்ணத்தில், நகைச்சுவை எண்ணங்களின் வெளிப்பாடாக மிக அருமையாக கணவன் மனைவிக்குள்ளே ஊடாடும் விஷயங்களை மிக அருமையாக எழுதியிருக்கிறார்.
அதற்கு ஒரு நாடக வடிவம் கொடுத்து, மூன்று தேவியர் இணைந்து மிகச் சிறப்பாக நமக்கு வழங்கி இருக்கிறார்கள். பலரும் ரசித்து பின்னூட்டம் இடுவதைப் பார்க்கையில், காமு சோமுவுக்கு எதிராக மகளிர் தரப்பிலிருந்து பெரிய எதிர்ப்புக் குரல் வராது என்கின்ற நம்பிக்கை எனக்கு உருவாகி இருக்கிறது.
பன்முகத் திறமையோடு செயலாற்றி வரும் ஸ்ரீவித்யா அவர்கள் மேலும் பல மைல் கல்களைக் கடந்து தனது தமிழ் பயணத்தை தொய்வின்றி தொடர்ந்து நடத்திச் செல்ல வேண்டும் என்று என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
படைப்பாக்கம் செய்த தேவி அருணுக்கும் தனது பிராட்காஸ்டில் அதனை நாடகமாக பதிவேற்றி தனது குரலால் மேலும் சிறப்பு செய்த ஸ்ரீவித்யாவிற்கும் உடனிருந்து திருவாக பேசிய (திரு என்றால் செல்வம் அதாவது லட்சுமி என்றுதானே பொருள்) மகாலட்சுமிக்கு உளம் நிறை நல்வாழ்த்துகள்!
- ஸ்ரீவி
----------------------
அருமை, அற்புதம், ஆரவாரத்தோடு கையொலிகள் !
மூன்று தேவியரும் கலக்கிட்டீங்க, போங்க.
காலத்துக்கு ஏற்ற கருத்தை நகைச்சுவையாக அளித்தது சிறப்பு.
முதலில் எலி என்று ஆரம்பித்தீர்.
ஆம் mouseல் இருந்துதானே கணிப்பொறி நுட்பம் ஆரம்பித்தது.
அது என்ன அலெக்சா?
எங்கள் காலத்தில் அலேக்தான்!
இந்த செயற்கை நுண்ணறிவு( AI) இப்போதுதான் முளை விடத் தொடங்கி இருக்கிறது. அசுர வித்தா , ஆசைத்தோழனா என்பது மனிதன்கையில்தான் இருக்கிறது. சரியான பயன்பாட்டில்,
மனித மூளைக்கு ஒரு உற்ற நண்பனாகப் பல பணிகளை சிறப்பாக ஆற்ற உதவும். பெயருக்கு ஏற்ப " மனிதனின் பாதுகாவலன்" ஆக செயல்படும். நம் வீட்டு சுட்டிகளை வளர்ப்பது போல கவனமாக செயல்படல் தேவை.
தலைக்கு மீறினால், எந்திரன்2.0 ரஜனி கதைதான்!
இந்த நுண்ணறிவு, உடல் நல பாதுகாப்பு, யாவருக்கும் கல்வி,வங்கிகளில் பயனாளர் நலன் காத்தல் என பலப்பல துறைகளில், மனிதனின் உற்ற துணயாக இருக்கலாமே ஒழிய மனித மூளைக்கு மாற்றாக உருவாக அனுமதிக்க கூடாது.
உ-ம்- பள்ளிச்சிறுவர்களின் படைப்புத் திறனைக் குலைக்க இந்த நுண்ணறிவை அனுமதிக்கக் கூடாது.
பெற்றோர் மிக்க கவனமாக இருத்தல வேண்டும்.
அந்த காலத்தில் வானொலி நாடகங்களைக்கேட்டே இள வயதைக் கழித்தவன்நான். " காப்புக்கட்டிச்சத்திரம்" என்று ஒலி நாடகத்தைக் கேட்பதற்கு வீட்டில் போட்டா போட்டி,பெட்டிக்கு அருகில் இடம் பிடிக்க!
தங்களின் சொல் ஒலி நாடகம் பழைய இனிய நினைவலைகளை எழுப்பியது🙏
மொத்தத்தில் ஓர்அருமையான மனமகிழ் நிகழ்ச்சி , செயற்கை நுண்ணறிவின் உதவி இல்லாமல்!
தொடரட்டும் உமது குழாமின் சொல்அலை முயற்சிகள்.
வாழ்த்துகள்!🙏🙏
- மோகன்
No comments:
Post a Comment