தள்ளு வண்டி மிக்சர் கடை:
நான்கு சக்கர
சைக்கிளில்
வண்டியில்
நாயக்கர் மாமா
தள்ளு வண்டி
மிக்சர் கடை.
கலர் கலராய்
கண்ணாடி
வச்ச பெட்டியில்
வித விதமாய்
தின்பண்டங்கள்
சுடச் சுட பக்கோடாவும்
மிக்சரும் முறுக்கும்.
காராச் சேவுடன்
கடக் முடக் சக்கர சேவும்.
காரா பூந்தியுடன்
இனிப்பு பூந்தியும்.
கோபுரம் போல்
அடுக்கிய மஞ்சள் நிற
ஓமப்பொடியும்.
மாமா அதை
உடையாமல்
எடுத்து பேப்பரில்
பொட்டலம் போட்ட
பாங்கும்.
காலையிலே
தந்தையிடம்
வாங்கிய
தினப்படியுடன்
எப்படா நாலு மணி ஆகும்
நாயக்கர் மாமா வண்டி
வரும்னு
வீட்டு முன்னாடி
நானும் என் தங்கையும்
தவமா தவம்
கிடந்த காலம்.
ஊரெல்லாம் சுத்தி வந்து
கடைசியா பஸ் ஸ்டாண்டு
முன்னாடி மிக்ஸர் வண்டி
நிலைக்கு வரும்.
சூரியன் மறைஞ்சதும்
பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில்
கலர் கலராய் மின்னும் கடை.
கலகலப்பாய் களை கட்டும்
வியாபாரம்.
பி.கு: தமிழகத்தில் குறிப்பாகத்
தென் தமிழகத்தில் நாயக்கர்களும்
இசுலாமியர்களும் மாமன் மச்சான்
உறவு.
- முகம்மது சுலைமான்
No comments:
Post a Comment