Wednesday, July 1, 2026

இதுவே அக் குலம்

 இதுவே அக் குலம்


பனியாய் நோய் விரட்டும் பகலவன் ஆகும் 

   பாயில் கிடப்போரை பாய்ந்தோடச் செய்யும்


முனியாமல் குறைகளை முழுவதும் கேட்கும் 

   மோட்சம், சொர்க்கம் என போகாமல் தடுக்கும் 


கனிவான தமிழ் பேசி காயங்கள் ஆற்றும் 

   கத்தியால் கீறியும் கருணையே ஊறும்


இனிய மாங்கனிகள் இலவசமாய்த் தரும் 

   இதுவே " மருத்துவர் " எனும் அக் குலம்.



மருத்துவர் குலம் வாழியவே! 💐🙏


__. குத்தனூர் சேஷுதாஸ் 1/7/2026


=====================

அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது 


மானுடராய் பிறப்பினும் 

கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது 


கூன் குருடு செவிடு இருப்பினும் 

அவற்றை நீக்கும் பேராற்றல் மிக மிக அரிது. 


பேராற்றல் கொண்ட

எங்கள் சங்க மருத்துவரோ

மருத்துவமும் பார்ப்பார்.

மனிதமும் வளர்ப்பார்.

மாங்கனியும் தந்திடுவார்!


பேராற்றல் மிக்க மருத்துவர்கள் அனைவருக்கும் 

நெஞ்சு நிறை நன்றிகளும் 

மருத்துவர் தின நல்வாழ்த்துகளும்


உங்கள் தோழன் ஸ்ரீவி


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...