கலாட்டா காலனி -- ஒரு வியப்பு
முத்துக்களைக் கண்டெடுத்து ஒன்றிணைத்தது
" முடியாது" என்பதை முறிக்க நினைத்தது
கத்துக்குட்டிகளின் காதைத் திருகியது
கதறக் கதற நடிக்கக் கற்றுத் தந்தது
பத்து பேரை வைத்தே படம் அதை எடுத்தது
பால் வாங்கப் போன எனை பாட இழுத்தது
சத்தம் போட்டு வைய கோபம் வந்தது
"சாவே வராதா உனக்கு?" வசனமது
சொத்தை விற்றுப் படம் எடுப்பார் தெரியும்
செல் வைத்தே எடுத்தாரா! நம்புவது கடினம்
தித்திக்கும் இக்காலத் தமிழே இதில் அதிகம்
தேநீர் கொடுத்தே எடுத்தாரோ இத் தொடரும்?
மொத்தத்தில் வியப்பு, சிரிப்பு எனப பல
முடிந்ததோ எட்டு வாரம் நம்ப முடியல
இத்தனை உழைப்பை விழுங்கிய "கலாட்டா காலனி"!
இதனை குண்டோதரனென அழைப்போமா இனி?
__. குத்தனூர் சேஷுதாஸ் 5/10/2026
No comments:
Post a Comment