சும்மா கிடந்த ரிமோட்டெடுத்து
விடியும்முன்னே டீவியப் போட்டு
தட்டு நிறைய குமிச்சு வச்சு
சோத்து மலைமேல பாத்தி கட்டி
சாம்பார் தயிரைப் பிரிச்சு விட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
வயிறு வளர்ந்திருக்கு நல்லா வீடு வெளங்கிருக்கு
வயிறு வளர்ந்திருக்கு நல்லா வீடு வெளங்கிருக்கு!!
அட! வீடு வெளங்கியென்ன மச்சான்
நமக்கு வாயும் வயிறுந்தானே பக்கம்
வாயும் வயிறுந்தானே பக்கம்!
வீடு வெளங்கியென்ன மச்சான்
நமக்கு வாயும் வயிறுந்தானே பக்கம்
வாயும் வயிறுந்தானே பக்கம்!
வீடு வெளங்கட்டும் பொண்ணே- நமக்கு
புள்ள இருக்குது கண்ணே
புள்ள இருக்குது கண்ணே!
வீடு வெளங்கட்டும் பொண்ணே- நமக்கு
புள்ள இருக்குது கண்ணே
புள்ள இருக்குது கண்ணே!!
வாழப் பழகி கூடிக் குலாவி
ஆரத் தழுவி அன்பு பெருகி
வாழப் பழகி கூடிக் குலாவி
ஆரத் தழுவி அன்பு பெருகி
சீராடும் சீமாட்டிகள் வாழ்வினில்
பட்ட கடன் இனி மாறும் - அந்த
இல்லம் மலருமே நாளும்
இல்லம் மலருமே நாளும்
அவர் பட்ட கடன் இனி மாறும் -அந்த
இல்லம் மலருமே நாளும்
இல்லம் மலருமே நாளும்!
அட! வீடு வெளங்கியென்ன மச்சான்
நமக்கு வாயும் வயிறுந்தானே பக்கம்
வாயும் வயிறுந்தானே பக்கம்!
வீடு வெளங்கட்டும் பொண்ணே- நமக்கு
புள்ள இருக்குது கண்ணே
புள்ள இருக்குது கண்ணே!
ஆளப் பிறந்தவர் வாழ்க்கையிலே
தள் ளாடிவந்திடக் காரணம் என்ன மச்சான்?
அவர் ஓடிய பாதைகள் எங்கேயுமே
சேராததால் வந்த தொல்லையடி!
கொஞ்சும் குழந்தைகள் வாழ்வதற்கு
இனி பண்ண வேண்டியது என்ன மச்சான்?
தினம் கொஞ்சிக் கொஞ்சிக் கொண்டு
கஞ்சி கொடுக்காமல்
சிந்திக்கச் சொல்லவேணுமடி!
வேடிக்கை தரும் இன்பங்களை
இன்னும் தட்டிப் பறிப்பது
மோசமன்றோ?
புதர் மூடிக் கிடந்த மனை சிறக்குது
வைபோகம் வீட்டிலே ஆகுமடி- இனி
வைபோகம் வீட்டிலே ஆகுமடி!!
அட! வீடு வெளங்கியென்ன மச்சான்
நமக்கு வாயும் வயிறுந்தானே பக்கம்
வாயும் வயிறுந்தானே பக்கம்!
நாளை போடப் போறேன் சட்டம்
உனக்கு உண்மை விளங்கிடும் திட்டம்
வீடு நலம்பெறும் திட்டம்!!
உண்மை விளங்கிடும் திட்டம்
வீடு நலம்பெறும் திட்டம்!!
உண்மை விளங்கிடும் திட்டம்....
வீடு நலம்பெறும் திட்டம்!!!!!!
- திரு
No comments:
Post a Comment