*இமயத்தின் தண்ணீர்.. இதயத்தில் கண்ணீர்*
உறைநிலை தகர்ந்து சமநிலை சிதைந்து,
மெல்லிய பிளவாய் பேரழிவின் வாயில் திறக்க,
ஐயாயிரம் மீட்டர் உயரே ஆயிரமது வயதில்
சூழ் கொண்ட பனிக்குடம் உடைப்பு!
நான்கைந்து ரிக்டர் இடிமுழக்கம்!
பீறிட்ட பில்லியன் கனமீட்டர் பெருக்கு!
மரங்களை முறித்து, பாறைகளை புரட்டி,
மனித முகத்தில் அப்பிய சகதிச் சுனாமி!
ல்ஹெந்தே கோலா, போடே கோஷி, திரிசூலி,
ஆறுகளே பாதையாய் அழிவே பிரவாகம் !
எச்சரிக்கையும் இல்லை;
எதிர்கொள்ள வலிமையும் இல்லை!
உறவைக் காணாமல் உயிர் தொலைந்தது!
ரசுவா மாவட்டம் ருசிக்க மட்டும் !
ஆறா பசியுடன் ஆறும்
அளக்க முடியா இயற்கையின் வேகத்தில்
உத்தரப்பிரதேசம், பீஹார் நோக்கி
உற்சாக ஊழி யாத்திரை!
உயர்த்த சிகரம் ஒடியும் வேளை
மனிதம் முளைக்கும் மறுநாள் காலை!
அறிவியல் கற்றது அரிச்சுவடி மட்டும்!செயற்கைக்கோளின் மொழியை கற்க,
பனிமலை நாடி பிடித்து அறிய,
அறிவியல் நிதமும் குறிவிலக்கம் படிக்கட்டும்!
- திருஞானசம்பந்தம்
No comments:
Post a Comment