*உலக ஏரிகள் தினம்*
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை சார்பாக உலக ஏரிகள் தினம் (World Lake Day) அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று முதல் உலக ஏரிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
*ஏரிகளின் முக்கியத்துவம்*
பூமியில் 11.70 கோடி ஏரிகள் உள்ளன. இவை மொத்த நிலப்பரப்பில் 4 சதவீதமாக உள்ளது.
காஸ்பியன் கடல்தான் உலகின் மிகப்பெரிய உப்புநீர் ஏரியாகும்
பெரும்பாலான நன்னீர், பனி மலைகளிலும், நிலத்தடியிலும் உள்ளது.
மேற்பரப்பு நன்னீரில் 90 சதவீதத்தை ஏரிகள் கொண்டுள்ளன. இவை குடிநீர் விவசாயம், தொழில்துறைக்கு பயன்படுகிறது. மேலும் மீன்கள், தாவரங்கள், வனவிலங்குகளுக்கு வாழ்விடமாக திகழ்கிறது.
வெள்ளநீர், கார்பனை உறிஞ்சி பூமியை குளிர்ச்சியாக வைத்திருப்பதால்,ஏரிகள் காலநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
நன்னீர் சூழல் அமைப்புகள் உணவு, நீர் மற்றும் ஆற்றலை வழங்குவதோடு, வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கின்றன.
இந்தச் சூழல் அமைப்புகள், சுனாமி மற்றும் அரிப்பிலிருந்து நமது கடற்கரைகளைப் பாதுகாக்கும் சதுப்புநிலக் காடுகள் வரை பரந்துள்ளன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஏரிகளை பாதுகாக்க கோரி ஐ.நா., சார்பில் ஆக. 27ல் உலக ஏரிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
*நோக்கம்*
*சுற்றுச்சூழல் பாதுகாப்பு:*
ஏரிகள் மற்றும் நன்னீர் அமைப்புகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
*பருவநிலை சீரமைப்பு:* வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல், கார்பனை சேமித்தல் மற்றும் வெப்பத்தைக் குறைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தைத் தடுத்தல்.
*இந்தியாவின் முக்கிய நன்னீர் ஏரிகள்*
*வுலர் ஏரி*
Wular lake (ஜம்மு-காஷ்மீர்): இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி. இது டெக்டோனிக் (புவிப் பலகை இயக்கங்கள்) செயல்பாட்டால் உருவானது. ஜீலம் நதி இதற்கு நீர்வழங்குகிறது.
*லோக்டக் ஏரி*
Loktak lake (மணிப்பூர்): வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி. இது 'பும்டிஸ்' எனப்படும் மிதக்கும் தீவுகளுக்குப் பெயர் பெற்றது. இது உலகின் ஒரே மிதக்கும் ஏரியாகக் கருதப்படுகிறது.
*கொல்லேரு ஏரி*
Kolleru lake (ஆந்திரப் பிரதேசம்): ஆசியாவின் மிகப்பெரிய ஆழமற்ற நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும். இது கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
*தால் ஏரி*
Dal lake (ஜம்மு-காஷ்மீர்): இயற்கை அழகு மற்றும் ஹவுஸ்போட் (Houseboat) எனப்படும் மிதக்கும் இல்லங்களுக்கு மிகவும் பெயர்பெற்ற நன்னீர் ஏரியாகும்.
*நைனிடால் ஏரி*
Nainital lake (உத்தரகண்ட்): நைனிடால் மலைவாசஸ்தலத்தில் அமைந்துள்ள ஒரு அழகான இயற்கை நன்னீர் ஏரியாகும்.
*தமிழக ஏரிகள்*
நமது முன்னோர்களும்,
மன்னர்களும்
நீரின் மகத்துவத்தை உணர்ந்தே பல்வேறு நீர் ஆதரங்களை ஏற்படுத்தி உள்ளார்கள்.மலைகளில் இயற்கையான,மற்றும் செயற்கை ஏரிகளும் உள்ளன.
தமிழ்நாட்டின் முக்கிய நன்னீர் ஏரிகளில் வீராணம் ஏரி (கடலூர் மாவட்டம்), செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் புழல் ஏரி (திருவள்ளுவர் மாவட்டம்),மதுராந்தகம் மற்றும் உத்திரமேரூர் ஏரிகள்(செங்கல்பட்டு மாவட்டம்)
பேரீஜம் ஏரி(கொடைகானல்),அவலாஞ்சி ஏரி(நீலகிரி)
ஆகியவை மிகவும் முக்கியமானவை ஆகும்.
சுற்றுச்சூழல் அமைப்புகளின் நீண்டகால நல்வாழ்வை உறுதி செய்வதற்கு, நீடித்த ஏரி மேலாண்மை மிகவும் இன்றியமையாதது.
மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் அதிகப்படியான நீரினைப் பயன்படுத்துவதால் அழியும் ஏரி வளங்களை மீட்டெடுத்தல் அவசியத்தினை
இந்நாளில் அனைவருக்கும் பகிர்வோம்.
இவற்றுடன்
நம் ‘அணை ஏரியும் ‘சேர்ந்திட
முயற்சிப்போம்😀😀😀
*அக்ரி சா.இராஜா முகமது
No comments:
Post a Comment