சற்று நீண்ட பதிவு- பொறுமை தேவை!
கம்பர் நல்ல சந்த நயத்தோடு கவி பாடுபவர்,இலக்கண சுத்தமாக.
அவர் வீட்டில் உள்ள கட்டுத்தறியில் உள்ள ஊடும் பாவும் ஒன்றிணைந்து நெய்யும்போது நல்ல சந்தத்துடன் நெய்யும்
போல் உள்ளதாக இப்பழமொழி உரைப்பதாக, கொள்ளலாம்.
கம்பன் வீடு தொடர்பாக மற்றொரு கதை, நான் படித்ததைப் பகிர்கின்றேன்:
கம்பர் வீட்டு வாசலில் மாட்டுச்சாணம் கொண்டு வறட்டி தட்டும் பெண்மணியிடம் ஒரு புலவர் கம்பர் இருக்கிறாரா என்று கேட்டார். அவள் உள்ளே நிறைய பேர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் பொறுக்க வேண்டும் என்றாள். அவருக்குக
கோபம் வந்து, நீ நிறைய, பேசுகிறாய்; கம்பரிடம் தமிழ் படித்திருக்கிறாயா என வினவினார்.
அதற்கு அவள் நான் ஒரு விடுகதை கூறுகிறேன்; பொருள் கூறுங்கள் என்றாள்.
விடு கதை பின் வருமாறு:
"வட்டமாக இருக்கும் வன்னி கொடியில் தாவும் கொட்டுபவர் கையில் கூத்தாடும் எரித்தால் சிவசிவ "
அது என்ன என்று கேட்டாள். அவருக்குத்
தெரியவில்லை.
( திரைப்பட தருமியின் முன்னோடியோ!)
கம்பர் வெளியே வந்ததும் அவரிடம் விடுகதையின் பொருள் கேட்டார்.
அதற்கு கம்பர் அது ஒன்றும் இல்லை ஐயா; அவளுடைய தொழிலை சொல்லி இருக்கிறாள் என்றார். ஐயா எனக்கு புரியவில்லை என்று இந்த புலவர் சொல்ல உடனே வரட்டியைத்தான் அப்படி சொன்னாள். வட்டமாக இருக்கும் என்று.மேலும் அதை வன்னி எனும் நெருப்பில் சுடுவார்கள்.(வன்னி மரத்தின் நெருப்பில் தான் வரட்டியை சுடுவார்கள்) சுட்டதும் எடுத்த சாம்பலே திருநீறு ஆகும் .அதை நெற்றியில் பூசும் போது சிவ சிவா என்று சொல்லி பூசிக் கொள்வார்கள் அல்லவா. அதைத்தான் அவள் அப்படி சொல்லி இருக்கிறாள் என்றார்.
புலவர் அசந்துவிட்டார்.
கம்பர் வீட்டில் வறட்டியே, கவிப்பொருள் ஆனால், கட்டுத்தறி ஏன் கவி பாடாது என்று தோன்றியது, எனக்கு.
No comments:
Post a Comment