கம்பு ஊன்றும் வயதில்...
நம்பிக்கை கை நீட்டி " வா போவோம் ! " என்றது
* நான்கு புண்ணியத் தலம் (Char Dham) தரிசனமாமது
* கம்பி நீட்டினோம் சென்னை வெயில் கண்டு
காசு செலவானதோ இலட்சங்களில் உண்டு
* தும்பியில் பயணித்த அனுபவமும் இது
தொடர் மலைகளால் மனம் மலைத்தது
தம்பியாய் நெடிய மலை நினைக்க வைத்தது
தகுதி, அந்தஸ்து... எல்லாம் தரை மட்டமானது
கும்பிட்டு தெய்வம் அதை ஏதும் கேட்கவில்லை
" கொடுத்தது போதும் போதும் இனி தேவையிலை "
தும்பைப் பூ கொட்டியதாய் வெண் பனி சூழ்ந்தது
துயரெலாம் அக்கணம் எங்கோ போய் வீழ்ந்தது
அம்பாக, ஊசியாகக் குளிரதுவும் தைத்தது
அணையாத் தீ நேர் அணைப்பை நினைத்தது
கம்பூன்றும் வயதில் நீள் கனவு நிறைவேறியது
கதிரவன் அருமை கன மண்டையில் ஏறியது.
__. குத்தனூர் சேஷுதாஸ் (3/6/2026)
* நான்கு புண்ணியத் தலம் -- யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத்
* கம்பி நீட்டி -- தப்பித்து
* தும்பி - Thumby Helicopter
No comments:
Post a Comment