Wednesday, June 3, 2026

பால்யத்திற்குத் திரும்பாதே

 பால்யத்திற்குத் 

திரும்பாதே என்றார் 

நா. முத்துக்குமார்.


பால்ய நினைவுகளை 

அசை போடாத 'பெருசு'

இங்கு யார் உண்டு?


"அந்தக் காலத்திலே 

நாங்க"

என ஆரம்பித்து 

எதிரில் உள்ள 

இளசுகளை 

அதிர விடாத 

மூத்த குடிமகன்கள் 

இல்லாத வீடா,

ஊரா அல்லது நாடா.


நானும் சிறிது 

பின்னோக்கிப்

பயணித்துப் 

பார்க்கிறேன்.


முள் குத்தும் 

நினைவுகள்

முன் வரவில்லை.

எல்லாமே 

இனிமைதான்.


பள்ளித்

தோழர்களுடன் 

ஆடிய நாட்கள்.


வீட்டுப் பாடம்

எழுதாமல் 

ஆசிரியரிடம் 

அடி வாங்கிய 

சுகம்.


கல்லூரிக் காலமோ 

கலகலப்பானது.


வங்கிப் பணியிலோ 

வித்தியாசமான 

மனிதர்கள், 

அனுபவங்கள்.


சற்றே திரும்பிப் 

பார்க்கிறேன்.

இன்றுதான் 

பிறந்தது போல் 

இருக்கிறது.

எழுபதாண்டுகள் 

பறந்து விட்டன.

இன்னும் 

சில காலம்தான்.


மூத்தோரே 

அவ்வப்போது  

நாம்

வந்த பாதையை 

திரும்பிப் பார்த்து 

சற்று ரசிப்போம்.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...