Wednesday, June 3, 2026

மாற்றி யோசி…

 *மாற்றி யோசி…*

கருவறைக்குள்தான் 

கடவுள் இருக்க வேண்டுமா..

*கடவுளுக்குள் கருவறை இருக்க கூடாதா?*

மாற்றி யோசித்த கடவுளின் 

*மகத்தான படைப்பு அம்மா!!*


=======================

ஆசிரியரின் அருமையை

பெற்றோருக்கு உணர்த்திய 

பொற்காலம் 

*கோடை விடுமுறை!*


===========================

*வெயிலே....*


பன்னிரண்டு மணிக்கு

பணியை தொடங்க வேண்டிய நீ

அதிகாலை ஐந்தரைக்கே

அடித்து வெளுப்பது

*விசுவாச ஊழியன் என்ற விருது வாங்கவா!*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...