•••••••••••••••••••••••••••••••••
எவன் மனிதன் ...
எவன் புனிதன் ...
•••••••••••••••••••••••••••••••••
மனங்களில் எல்லாம்
மனிதம் பூக்கவும்
தினமும் அநீதியை
எதிர்த்துக் கேட்கவும்
சினமதை அகற்றி
சிறப்போடு வாழவும்
உன்னால் முடிந்தால்
நீயே மனிதன்!
இதயம் திறந்து
அன்பை விதைத்து
உதயம் தோறும்
நல்வழி நடந்து
உலகம் போற்ற
நீயும் நடந்தால்
மனித குலத்தில்
நீயே புனிதன்!
உங்கள்_தோழன்_ஸ்ரீவி
No comments:
Post a Comment