உப்புமா
ஆரம்ப சமையல் கல்விக்கான பிள்ளையார் சுழி
பிரம்மச்சரிய ஆண்களின் பிரம்மாஸ்திரம்
உடைந்த அரிசிக்கு மற்றுமொரு ஜனனம்
அம்மாவுக்கு கை கொடுக்கும்
அவசரக் காலை நேரங்களுக்காக.
அப்பாவுக்கு அம்மா கொடுக்கும்
அலுவலக மாலை சோர்வுக்காக.
ஆமாம்! ஒரு தட்டு உப்புமா போதும்,
வாழ்க்கையை சுவைக்கத் தொடங்க!
எளிமையின் அர(ரி)சி உப்புமா!- அதுவே
எண்ணெய்க்கு பதிலாய் வெண்ணெய்யும்
கறிவேப்பிலையுடன் காய்கறியும்
கடலைக்கு மாற்றாய் முந்திரியும் கலந்தால்
ஏகாந்தமான உணவு திருவிழா !
No comments:
Post a Comment