Sunday, March 1, 2026

அலை

 பெரியதாய் எதிர்பார்க்கையில்,  சிறியதாய் வந்து உன் கால்களை முத்தமிடுவேன் ;


சிறியதாய் எண்ணி ஏளனம் செய்யும் பொழுது, 

பெரியதாய் வந்து திணறடித்து செல்வேன் ;


எது எப்படி இருப்பினும் ,உறுதி உன்னுடையது;


உன் வாழ்க்கையின் துன்பங்களும் என்னை  போன்றே;


சிறியதாய் இருப்பின் நிம்மதி கொள், 


பெரியதாய் இருப்பின் மூழ்கி விடாமல் எழுந்து  நில் ;


வந்த வழியே சென்று விடும்


எது எப்படி இருப்பினும் 

உறுதி உன்னுடையது...


இப்படிக்கு 

அலை

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...