புலன அலப்பறைகள்
பாராட்டு மழை பெய்யாதபோதெல்லாம்
படைக்கும் ஊற்றுக் கிணறுகளை
வற்றாமல் பாதுகாக்கும்
சிறு துளி நீ....விருப்பக் குறி!
படைப்பவர்களை ஊக்குவிக்கும் அன்புக்குறி...
உண்மையாய் இட்டால்
படைத்தது பிடித்தது என்பதற்கான
அறிகுறி
மற்றவர்கள் இட்டுள்ளனரா என
பார்த்து இடுபவரோ
தனக்கென ஒரு கருத்தில்லாத
தற்குறி ...
வேண்டியவர்கள் படைப்புகளுக்கு
வேறு வழியில்லாமல் இட்டால் உண்மைக்கு குறிவைத்த
அம்புக் குறி...
ஒருவரை தாழ்த்த மற்றவருக்கு இட்டால் இடறிப் போகுமே அறநெறி ...
சாதி மதம் பார்த்து இட்டால்
பிடித்துக் கொண்டுள்ளது இனவெறி...
எது எப்படியோ...
படைப்பாளிகளுக்கு ஊக்கம் தரும் உனக்கு கோடி நன்றி!
உன் உதவியைப் பொருட்படுத்தாமல் ஒருவன் படைத்துக் கொண்டே இருந்தால் அவனுக்கு நீ தேவையே இல்லை என்பதை நீ அறி!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment