Saturday, February 7, 2026

ஒரு பெட்டியின் சிக்காகோ ஆசை-பயணக் கட்டுரை(3)

 *சொதப்பல்*

*ஒரு பெட்டியின் சிக்காகோ ஆசை*


மூவரும் சரியான நேரத்தில் சிகாகோ வந்து சேர்ந்தோம். சக்கர நாற்காலி சேவையால், எவ்வித சிரமமுமின்றி *Baggage Collection – Belt 12*-க்கு வந்து சேர்ந்தோம்.


நம் நாட்டில், பெட்டிகளைப் பெறுவதற்கு முன்பே தள்ளுவண்டிகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இங்கு, *பெட்டிகளை collect செய்த பிறகே* தள்ளுவண்டிகள் வழங்கப்படுகின்றன. இட நெருக்கடியைக் குறைக்க எடுத்த நல்ல முயற்சிதான்… ஆனாலும் நமக்கு கொஞ்சம் பொறுமை தேவை.


மேலும், belt-இலிருந்து பெட்டிகளைப் பெற *பயணிகளுக்கு மட்டுமே* அனுமதி. வரவேற்க வந்தவர்கள் collection area-க்கு வர அனுமதி இல்லை. இதுவும் இட நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் இன்னொரு முயற்சியே.


ஆனால் உள்ளே நிலைமை என்னவென்றால், சுமார் *500 பயணிகள் × 2 பெட்டிகள் = 1000 பெட்டிகள்*. அதற்கு ஏற்ற அளவில் *இடமோ, belt-களோ இல்லை* என்பதே நிதர்சனம். அவ்வளவு பெரிய, கனமான பெட்டிகளை belt-இலிருந்து இழுத்தெடுக்க, *சிலர் ஜிம்முக்குப் போக வேண்டிய பயிற்சியை இங்கேயே முடித்துக் கொண்டார்கள்.*


அதன்பின், சிகாகோவிலிருந்து *Dallas* செல்ல *American Airlines*-ல் தனியாக டிக்கெட் எடுத்திருந்தோம். தள்ளுவண்டியில் பெட்டிகளை அடுக்கி, *airport train*-ல் *domestic airport*-க்கு புறப்பட்டோம்.

அப்போது *7 பெட்டிகளுக்குப் பதிலாக 6 பெட்டிகள் மட்டும்* நம்முடன் வந்துவிட்டன. அந்த நேரத்தில், ஒரு பெட்டி சிகாகோவில் *நான் இங்கேயே இருக்கிறேன்* என்று முடிவு செய்திருப்பதை நாம் அறியவில்லை.


Domestic check-in காரணமாக, *Etihad Airlines* baggage tag அனைத்தையும் பிய்த்துவிட்டோம்.

Dallas விமான நிலையம் வந்த பிறகுதான், *“ஒரு பெட்டி வரவில்லையே?”* என்ற ஞானோதயம் ஏற்பட்டது.


உடனே baggage department-க்கு phone.

அவர்கள்: *“baggage tag number?”* கேட்டார்கள். 

நாங்களோ: *“அதை எல்லாம் முன்பே கழற்றிவிட்டோமே!”*


பின்னர், பெட்டிகளில் ஒட்டியிருந்த *baggage label*-களை வைத்து, *7-ல் 5 பெட்டிகளின் அடையாளங்களை மட்டும்* கண்டுபிடித்தோம்.

மீதமிருந்த *2 பெட்டிகளில் ஒன்று தான் சிகாகோ விமான நிலையத்தில் இருக்கிறது* என்று குறிப்பிட்டு *online form* நிரப்பினோம்.


*7 நாட்கள்* கழித்து, இன்று அந்த பெட்டி *FedEx* மூலம் வீடு வந்தடைந்தது.

பெட்டியோ பாதுகாப்பாக வந்து விட்டது ஆனால் இது முழுக்க முழுக்க *எங்களது கவனக்குறைவால் ஏற்பட்ட சொதப்பல்* என்பதால், *courier செலவும் நம்முடையதே*.


ஆனாலும்,

*ஒரு பெட்டி சிகாகோவைச் சுற்றிப் பார்க்க நாம் செலவிட்டது courier செலவு மட்டுமே*

என்பது,

எங்களுக்கு கிடைத்த *ஒரு சிறிய ஆறுதல்* 😄

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...