Sunday, February 8, 2026

பச்சோந்தி


பச்சோந்தி!


ஒரு கவிதைப் பூவின் நிறம் 

இன்னதென அறுதியிட்டு

இயம்பிட இயலுமோ?

பல்வேறு உள்ளத் தோட்டங்களில்

வெவ்வேறு நிறத்திலல்லவா 

பூக்கின்றது!


- சாய்கழல் சங்கீதா


==============================


இயற்கை வரைந்த ஓவியம் 

அதுவே  ஒரு நிறம்

நிறக் கண்ணாடி கண்களுக்கு 

அதுவே வேறு நிறம்

கவி வடித்த கவிதை 

உதிர்த்த கருத்து ஒன்று

மனக்கண்ணாடி வாசிப்பில்

உதித்த கருத்தோ வேறொன்று...


- அமுதவல்லி


============================

*கவிதைக்கு நிறம் மாறுது* (படிக்கிறவங்க படி மாறுது)

*கவிஞனுக்கும் நிறம் மாறுது* (மூட், டென்ஷன், கோபம், சந்தோஷம் எல்லாம் வெவ்வேற நிறமா வருது)

*ஆனா சமூகத்துல* இன்னும் *நீ எந்த ஜாதி/வர்ணம்* னு பாக்குறது மட்டும் மாறவே இல்லை.

அதனால் தான், *மனிதனை பச்சோந்தி* என்று அழைக்கவே கூடாது 😆


- தியாகராஜன்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...