உலகம் உருண்டை தான்
பள்ளிப் பருவத்தில் ஆசிரியர் சொன்னது
பாராம் நாம் உறைவது கோளம் என்று
துள்ளும் அலைகடல் படம் ஒன்று வரைந்தார்
தொலைவில் கப்பல் காட்டி விளக்கி விரைந்தார்
உள்ளே களிமண்ணாம் ஒன்றும் ஏறவில்லை
ஓணான் போல் தலையாட்டினேன் வழி இல்லை
சுள்ளென அவ் உண்மை விளங்குது இன்று
சென்ற திங்கள் அனுப்பியது (forwarded) என்னிடமே இன்று.
__. குத்தனூர் சேஷுதாஸ் 8/2/2026
No comments:
Post a Comment