Thursday, February 5, 2026

விடியல்

 காலை கதிரவன் - கடும் பனி விலக


விலகிய திரைச்சீலை - வெள்ளென வானம்


வானம் முழுவதும் - வலம் வந்த பறவைகள்


பறவைகளின் ஓசை - பண்ணிசையாய் ஒலிக்க


ஒலித்த அவ்வோசையில் - ஓராயிரம் கீதங்கள்


கீதத்தின் இனிமை- காதுகளில் வருட


வருடிய கூச்சத்தால் - வாய்விட்டு சிரித்தாள்


சிரிப்பதை விடுத்து சீக்கிரம் எழுது


எழுப்பிய ஆசிரியையை - எட்டப்பனாய் பார்த்தாள்


பார்த்த பொழுதே புரிந்தது- தானிருப்பது தேர்வறையென்று!!!!

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...