Thursday, February 5, 2026

*கெத்து வெத்து *

 *கெத்து  வெத்து *


 சொகுசாக வாழ்ந்தால் கெத்து,

 சோகத்தில் வாழ்ந்தால் வெத்து.


 உழைத்து உயர்ந்தால் கெத்து,

 பிறர் உழைத்து உயர்ந்தால் வெத்து.


 தர்மம் செய்தால் கெத்து,

 தர்மம் வாங்கினால் வெத்து.


 கணவன் மனைவி புரிந்து வாழ்வது கெத்து,

 பிறர்  அவர்களை

 நகைக்க வாழ்வது   வெத்து.


 பெற்ற பிள்ளைகளை பேணி வளர்ப்பது கெத்து,

 பிறர் அவர்களை ஏளனம் செய்தால் வெத்து.


 கல்வியை கடமையுடன் போதித்தால்  கெத்து,

 கடன்னு என்று போதித்தால் வெத்து.


 அவன் காசில் ஐட்டன் கார் வாங்கினால் கெத்து,

 அப்பா பணத்தில்  ஆடி கார் வாங்கினால் வெத்து.


 கதிரவன் ஒளியை உமிழ்வதால் கெத்து,

 அவன் ஒளி இன்றி உலவினால் வெத்து.


 பெற்றோரை கடைசி வரை பேணி காப்பது கெத்து,

 தெரிந்தே அவர்களை முதியோர் இல்லம் அனுப்புவது வெத்து.


 வீட்டில்  சுவையாக  சமையல் செய்தால் கெத்து

 சுகியில் ஆர்டர் செய்து சாப்பிட்டால் வெத்து.


 கடைசி மூச்சுவரை காசோடு இருப்பது கெத்து,

 காசு இல்லாமல் கஷ்டப்பட்டால் வெத்து. 


 ஏ!!மாநிடா,                கெத்தாக வாழ திட்டமிட்டு, உழைத்து, பொருள்  ஈட்டி, மற்றோர் வியக்க வாழ வேண்டும்.

 கெத்தாக வாழ வேண்டுமா?

 அல்லது  

 வெத்தாக வாழ வேண்டுமா  என்பதை நீயே முடிவு செய்து கொள்.


 சிசு.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...