21/02/2026
உலகத் தாய்மொழி தினம்
**************************
என் தாய்மொழி தமிழ் 👏👏👍
என் தாயிடமிருந்து நான் வாய்மொழியாக முதலில் கற்க ஆரம்பித்த மொழி- அம்மா என்று ஆரம்பித்து அப்பா, அண்ணா, அக்கா என்று உறவுகளை அறிமுகப்படுத்திய மொழி.
அகர முதலாக , கற்ற மொழி; ஆதி மொழி.
யானறிந்த மொழிகளிலே இனிதானதும்,என்றும் தேமதுர இசை போலும் ஒலிக்கும் மொழி.
தமிழையே தாயாகப் போற்றும் பீடு மிக்க பாரம்பரியம் நமது.
இத்தாய் என்றும்இளமை உடையவள், என் உள்ளத்தில் வைத்துப் போற்றும் என்னைப்பெற்ற தாயின் நினைவுகள் போலே.
தமிழ்த்தாயும் என்தாயும் வேறல்லவே!
செப்பும் மொழி யாவும் நம்தாயின் மொழிகளே;நோக்கும் பார்வையில் உள்ளது வேறுபாடு.
வரும் தலைமுறைகளுக்கும் தாய்மொழியை கொண்டு செல்லலாம், தமிழை மெல்லச்சாக விடாமல்; செயற்கை நுண்ணறிவின்துணை கொண்டு.
நடக்கும் ,
இளைய சமுதாயம் மனம் வைத்தால்!
வீட்டில் தமிழ் பேசுவதே நல்ல ஆரம்பம்.
எம்மொழியும் செம்மொழியே !
உலக தாய்மொழி கொண்டாடுவோர்க்கு,
வாழ்த்துகள் பல🙏🙏
No comments:
Post a Comment