Saturday, February 21, 2026

தாய்மொழி திருநாள் நல்வாழ்த்துகள்

 *அ* னு தினமும் நாம் இங்கே மகிழ்வுறவே 


*ஆ* ர்வத்துடன் நாமெல்லாம்


*இ* ணையற்ற செம்மொழியில் 


*ஈ* டிகை° எடுத்து எழுதி வந்தால் 


*உ* லகம் முழுதும் தமிழ் செழிக்கும் 


*ஊ* ற்றுப் பெருக்காய் 

கவிகள் ஊறும்


*எ* ழுத்தெல்லாம் கோத்தெடுத்து


*ஏ* ற்றம் தரும் சொற்கள் தொடுத்து 


*ஐ* க்கியமாய் நாமெல்லாம் 

கரமிணைத்து


*ஒ* ப்பிலா தமிழ் 

புகழ் பாடி 


*ஓ* ங்கி நாமும் முழங்கிடுவோம் 


*ஔ* வை போற்றிய தமிழ் வாழி!


*நற்றுணையாவது நம் தமிழே!*

*நற்றமிழ் என்றும் நம் உயிரே!!*


*அனைவருக்கும் தாய்மொழி திருநாள் நல்வாழ்த்துகள்*


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...