Sunday, October 25, 2026

ஒருவனால் அருமை

 ஒருவனால் அருமை


பேரன் அழைக்க வந்தேன் பெங்களூரு

   பெருசா ஒண்ணுமில்லே ஒரே குளுரு


" ஊரைச் சுற்றலாம் வா போவோம் தாத்தா!

   உவகை கொள்வீர் இயற்கையைப் பாத்தா"


"ஆர் வர விரித்தாய் நீ பசும் புல் கம்பளம் ?

   அழகு இயற்கையே! சொல்லேன் என்னிடம் "


தேரென உயர் தருக்கள் காட்சி எங்கும் தந்தன

   தீந்தமிழோடு போட்டியிட தேனீ தேன் சேர்த்தன


கார் முகில் திசை தொலைத்து புலம்பின "ஐயகோ!"

   காளான்கள் குடை விரித்து சென்றன எங்கோ


ஊர்வசி நேர் ஒரு மகள் ஆடினாள் ஊஞ்சல் 

   "உதிர்க்கும் மரமல்லியே! இலையோ *துஞ்சல்?"


"வாரிக் கொள் எமை" என விளாம்பழம் தொங்கின

   வனமெங்கும் மரவட்டை "மெட்ரோக்கள்" இயங்கின

   

ஓராயிரம் இவைகளால் இல்லையாம் பெருமை

   ஒருவன் என் பேரனால் பெங்களூரு அருமை. 


* துஞ்சல் -- உறக்கம் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 25/10/2026

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...