*சாதனை படைத்த கவியரசு 100 கவியரங்கம் மற்றும் பாட்டரங்கம் விவரணம்*
*2026 அக்டோபர் திங்கள் 11-ம் நாள்* காலை 9:30 மணிக்கு பூர்வா விண்டர்மியர் குடியிருப்பில் பல் பயன்பாட்டுப் பெருவரங்கத்தில் கோலாகலமாக *கவியரசு 100 - கவியரங்க மற்றும் பாட்டரங்க* சிறப்பு நிகழ்ச்சி நடந்தேறியது.
மங்கலகரமாக நிகழ்ச்சியைத் துவக்க குத்துவிளக்கினை நமது சிறப்பு விருந்தினர்
திரு. கைலாஷ்,
திருமதி. சூர்ய காந்தா
திருமதி. சந்திரா
திருமதி. விஜய குமாரி
திரு. செந்தில் குமார்
ஆகியோர் ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
பின்னர்,
*தமிழ்த்தாய் வாழ்த்து ப் பாடலோடு* நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
*செல்வன் சாய் பிரணவ்* நல்ல தமிழில் *வரவேற்புரை* நல்கினார்.
முதல் நிகழ்ச்சியாக *கவியரசு 100 கவியரங்கம்* நெறியாளர் *திரு. சாய்ராம்* வழிகாட்டுதலில் துவங்கியது.
*காதல் பெருந்தலைவன் கண்ணதாசன்* என்கிற தலைப்பில் *திருமதி. சுல்தானா* அவர்களும்,
*காவியத்தலைவன் கண்ணதாசன்* என்கிற தலைப்பில் *திரு. திருஞான சம்பந்தம்* அவர்களும்,
*திரைப்படப் பாடல்களின் சகாப்தம் கண்ணதாசன்* என்கிற தலைப்பில் *திரு மோகன் ஐயா* அவர்களும்
*வாழ்வியலைக் கூறும் தத்துவ ஆசான் கண்ணதாசன்* என்கிற தலைப்பில் *திரு. பிச்சைமணி ஐயா* அவர்களும்,
*நகைச்சுவை நாயகன் கண்ணதாசன்* என்கிற தலைப்பில் *திருமதி. அமுதவல்லி* அவர்களும்,
*சோகப் பாடல்களின் இமயம் கண்ணதாசன்* என்கின்ற தலைப்பில் *திரு. கணேசன் ஐயா* அவர்களும்
*காலத்தை கடந்து நிற்கும் கலா ரசிகன் கண்ணதாசன்* என்கின்ற தலைப்பில் திருமதி. வித்யா அவர்களும்,
*தினையளவு சொல்லி பனையளவு விளக்கும் ஞானப் பேராசான் கண்ணதாசன்* என்ற தலைப்பில் *ஸ்ரீவி* அவர்களும்
தமது கவிதைகளை வாசித்து அவையோரை மகிழ்வித்தார்கள்.
கவியரங்கத்தை நெறியாளராக வழிநடத்திய சாய்ராம் அவர்களின் நகைச்சுவை மிகுந்த உரையாடல்களும், அவரது அனுபவங்களை விவரித்த விதமும்,
ரசித்து மகிழ்ந்த உறுப்பினர்களின்
உற்சாக கரவொலியாலும்
கவியரங்கம் கலகலப்பாக களை கட்டியது.
பிறகு சங்கத் *தலைவர் திரு ஸ்ரீவி* அவர்களும் சங்க *செயலர் திருமதி மலர்விழி* அவர்களும் சங்க செயல்பாடுகள் குறித்தும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்கள். சங்கச் செயலர் சங்க செயல்பாடு குறித்து மேடையில் பேசுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது. தனது அளப்பரிய பங்களிப்பால் சங்க செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்கும் அவருக்கு நமது பாராட்டுதல்கள்.
அதன் பின் நிகழ்ச்சியின் *சிறப்பு விருந்தினர் மருத்துவர் திரு. கைலாஷ்* அவர்கள் நமது சங்கத்தின் தலைவர் ஸ்ரீவி அவர்களால் கௌரவிக்கப் பட்டார். அதைத் தொடர்ந்து அவரது நகை உணர்வும் உடல் நலம் சார்ந்த அதிக தகவல்களும் மிகுந்திருந்த சிறப்புரை அவையோரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
அதன்பின் கவியரசின் பாடல்களை இன்னிசைத்த பாட்டரங்கம் துவங்கியது:
*பார்த்தேன் ரசித்தேன்* பாடலை *டாக்டர் கைலாஷ் மற்றும் விஜயலட்சுமி* பாடினார்கள்
*அத்தான் என்னதான்* பாடலை *திருமதி. வாசலட்சுமி* பாடினார்
*ஒரு கோப்பையிலே* பாடலை *திரு. துரைராஜ்* இன்னிசைத்தார்.
*சிப்பி இருக்குது* பாடலை *திரு சாய்ராம் மற்றும் துர்கா சாய்ராம்* பாடினார்கள்..
*மலர்ந்தும் மலராத* என்ற பாடலை நமது உறுப்பினர் *திரு திருமலை குமார்* அவர்கள் கவியரசின் புகழ் பாடும் வகையில் *விடிந்தும் விடியாத* எனத் துவங்கும் பாடல் வரிகளை எழுதி இருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் கவியரசுவை சிறப்பிக்கும் வகையில் அந்தப் பாடலை இளம் தம்பதியர் *பிரபு-வித்யா* இருவரும் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்கள்.
*தெய்வம் தந்த* வீடு எனும் பாடலை ராஜ் பாரீசில் இருக்கும் நமது உறுப்பினர் *திரு. ஸ்ரீவத்ஸன்* சிறப்பாக பாடினார். இவர் முதன்முறையாக நம் மேடை ஏறுகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
*கம்பன் ஏமாந்தான்* பாடலை நமது நிதிச் செயலர் *சாயி ராம்* அவர்கள் பாடி அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
*நான் பேச நினைப்பதெல்லாம்* டாக்டர் கைலாஷ் ,& துர்கா அவர்களும் பாடி அவையை மகிழ்வித்தார்கள்.
நிறைவாக,*பிறக்கும் போதும்* எனும் பாடலையும்
*அஙகும் இங்கும் ஆசை உண்டு* பாடலையும் திரு சாய்ராம் அவர்கள் பாடி பாட்டரங்கத்தை நிறைவு செய்தார்.
பின்னர், கவியரங்கம், பாட்டரங்கம், வரவேற்புரை, நன்றி உரை மற்றும் தொகுப்புரை ஆகியவற்றில் பங்கேற்ற பங்கேற்பாளர்களுக்கு தமிழ்ச் சங்கத்தின் சார்பாக புத்தகங்களை சிறப்பு விருந்தினர் அவர்கள் வழங்கினார்கள்.
நிறைவாக, *செல்வி. ஜனனி அருண்* அவர்கள் *நன்றியுரை* கூற நாட்டுப்பண் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக *திருமதி. ஸ்ரீவித்யா* அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சி சிறப்புற அமைய கருத்தாலும் கரத்தாலும் உழைத்திட்ட அனைவருக்கும் மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் நன்றி பாராட்டுகிறது.
இந்த இந்த நிகழ்ச்சிக்காக தலா ரூபாய் ஐயாயிரம் வழங்கிய மருத்துவர் செல்வன் ஐயா அவர்களுக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நல்ல இதயத்திற்கும் தமிழ்ச் சங்கம் உளம் நிறை நன்றிகளை உரித்தாக்குகிறது.
இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு வித்திட்ட ஒலி அமைப்பினை தனது ஸ்டூடியோவில் இருந்து வழங்கி உதவிய நமது உறுப்பினர் திரு. கார்த்திக் ரமணி அவர்களுக்கு நன்றிகள் பற்பல.
இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஆக்கிட தங்கள் கர ஒலிகளால் உற்சாகம் தந்திட்ட உறுப்பினர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்🙏
No comments:
Post a Comment