*புத்தகப் பிரியர்கள் தினம்*
மனிதனுக்கு மனிதத்தை சொன்னது புத்தகம்
பல்லுயிர் ஓம்ப கற்றுக் கொடுத்தது புத்தகம்
சுற்றுச்சூழலை பாதுகாக்க அறிவுறுத்தியது புத்தகம்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என சொன்னது புத்தகம்
கற்றனைத் தூறும் அறிவு என சொன்னது புத்தகம்
பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்று கற்க வலியுறுத்தியது புத்தகம்
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றம் என சொன்னது புத்தகம்
அறிவியலை அழகுற போதித்தது புத்தகம்
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று கூறியது புத்தகம்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என சொன்னது புத்தகம்
*புத்தகப் பிரியர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்*
*புத்தகங்களை வாசிப்போம் - பூவுலகை நேசிப்போம்*
-ஸ்ரீவி
No comments:
Post a Comment