••••••••••••••••••••••••••••••••
*{46} சிலம்பொடு ஒரு பயணம்*
*கானல்வரி காதை*
*துவளும் இடைப் பெண்ணாள்*
••••••••••••••••••••••••••••••
*கடல் புக்கு உயிர் கொன்று வாழ்வோர் நின் ஐயர்....*
கடலாடி மீன்பிடித்து அதனை விற்று வாழ்பவர்கள் உனைப் பெற்றோர்
*உடல்புக்கு உயிர் கொண்டு வாழ்வை மன் நீயும்*
நீயோ உன்னைப் பார்ப்பவரின் உடலில் புகுந்து கொண்டு அவரை கொல்பவளாய் இருக்கிறாய்.
... ...
......
*இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய்*
உடல் வலிமையால் துன்பப்பட்டு வெளியும் சிற்றிடையை இழந்து விடாதே.
*கொடுங் கண் வலையால் உயிர் கொள்வான் நுந்தை*
வளைந்த கண்களுடைய வலையை வீசி உயர் பறிப்பவர் உன் தந்தை.
*நெடுங் கண் வலையால் உயிர் கொல்வை மன் நீயும்*
நெடிய உன் கண்கள் எனும் வலை வீசி பிறரை கொல்பவள் நீ.
*நுடங்கி உகும் மென் ,நுசுப்பு இழவல் கண்டாய்*
மின்னலைப் போல் உள்ள உன் எடை தடுமாறுகிறதே! அதை கவனி...
*ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர்*
கடல் அலை மேல் சீறிப்பாய்ந்து ஓடும் படகுகள் (திமில்) மேல் சென்று உயிர் கொல்வர் (மீன் பிடிப்பர்) உனைப் பெற்றோர்
*கோடும் புருவத்து உயிர் கொல்வை மன் நீயும்*
வில் போல வளைந்து இருக்கும் உன் புருவத்தாலேயே பார்ப்பவரை கொல்கின்றாய் நீ.
*வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய் நீ*
உடல் சுமையால் வருந்தி வாடும் உன் மெல்லிய இடையை கவனி.
*******
மோகன் ஐயா தொடர்கிறார்
*******
கானல் வரிக்காதையில் நம் பயணம் தொடர்கிறது.....
ஐயா,
இப்போது நாம் காண இருக்கும் பகுதியில்,
"இழவல் கண்டாய்" என்றுமுடியும் திணை நிலைவரியாக அடிகள் படைக்கிறார். "இழவல் கண்டாய்"- மின்னல் போன்ற இடையை வருந்த விடாதே எனப்பொருள் கொள்ளலாம்.
திணைக்கோட்பாடு மனிதனை மட்டுமின்றி அத்திணையில் உள்ள இயற்கை வளங்கள், விலங்குகள், நீர் , மண் ஆகியவற்றையும் இணைத்து ஒரு முழுமையான இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும். இங்கும் நெய்தல் நில செயல்பாடுகளின் பின்னணியில் தலைவியைக்கூடிப்பிரிந்த தலைவன் தன்ஆற்றாமையைக் கூறுவதை நீங்கள் விவரித்தீர்.
இந்த இடந்தலைப்பாட்டின் "உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வை"- என்பது அருமையான வரி! -
உடலிலே புகுந்து உயிரைக் கொன்று நீ வாழ்கிறாய்! என்கிறான்.
என் பயணத்தில் நான் கண்டவற்றைக்கூறுகிறேன்:
" ஒவ்வாய் இவளை" என்று தலைவி வர்ணிக்கப்படுகிறாள்.
"ஒவ்வாய் " என்றால் "இவளுக்கு நிகராக வேறு வேறு யாரும் இல்லை" என்று பொருள்.
நிச்சயமாக!
பவளத்தால் செய்த உலக்கையால் வெண்முத்துகளைக் குற்றுவாள்.
புன்னை மர நிழலிலே ,புலால் நாறும் இடத்தில்அன்னப்பறவை போன்று அசைந்து அசைந்து நடக்கிறாள்.
தேனைத் தன்வாயில் வைத்திருக்கும் நீல மலரைக்கையில் ஏந்தி , மீன்வற்றலைக்காய வைக்கப் பறவைகளை ஓட்டிக்கொண்டிருக்கிறாள்.
பேரழகிதான்!
ஆனால் அவளின் செவ்வரி படர்ந்த கண்கள் குவளை மலர்களோ, வேல்களோ அல்ல. அவை மிகவும்கொடியன.
" சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய்" என மூன்று முறை உறுத்திக்கூறுகிறான்.
"அழகிய அன்னமே , நீ அவளோடு சேராதே! கடலை வேலியாக, கொண்ட உலகைத் தன் அழகால் கலக்கிக்கொண்டு
இருக்கிறாள்."நடை ஒக்கும்" என்று அவள்பின் சென்றுவிடாதே "என்கிறான்.
பாருங்கள்!
தலைவன்தலைவியை நினைத்து வருந்தும்போது கூட இயற்கையாடு ஒட்டிய சுற்றுச்சூழல் நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, பாடுகிறான்.
நாம்தான் செயற்கை நுண்ணறிவு என்ற பெயரில் இயற்கையை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறோம்.
மேலே பயணத்தைத் தொடருவோம்.
No comments:
Post a Comment