Saturday, August 1, 2026

உலக "தாய்ப்பால் வாரம்" (ஆகஸ்ட் 1 முதல் 7வரை)

 உலக "தாய்ப்பால் வாரம்" (ஆகஸ்ட் 1 முதல் 7வரை)


வாய் திறந்து அழுதவாறே குழவியது பிறக்கும் 

   வள்ளலாம் பெண்மையில் பாலும் சுரக்கும் 


ஆய்ந்து பலமுறை பின்னர் தந்ததோ இயற்கை !

   ஆடவரைத் தவிர்த்து பெண்மைக்கு இப் பொறுப்பை


சேயது அருந்தும் முதல் அமுதம் அது

   செயற்கையே மற்றவை நாம் தருவது 


நோய் எதிர்ப்புச் சக்தி அதில் நிறைய உண்டாம் 

   நுண் கிருமிகள் தோற்று மண்ணைக் கவ்வுமாம்


ஓயாமல் பால் சுரக்க பெண்ணில் ஊற்றுக்கண் 

   ஓரவஞ்சனையே ஆணின் மார்பில் இரு புண் 


தேய்ந்து போம் இளமை என எண்ணுமோ தாய்மை ?

   தெய்வம் குழவிக்குத் தரச் சொன்ன அக் கொடை


பாய்ந்து வரும் வெள்ளம் நேரே தாயன்பு

   பல பிறவி எடுத்தும் "பால் கடன்" தீராது


தாய்ப்பால் தருவதால் பெண்ணுக்கும் நன்மை 

   தழைக்கும் ஆரோக்ய மனித குலம் உண்மை.


__. குத்தனூர் சேஷுதாஸ் 1/8/2026

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...