Friday, July 17, 2026

*தந்தை தன் மகளைப் பற்றி எழுதிய ஒரு கவிதை*

 *தந்தை தன் மகளைப் பற்றி எழுதிய ஒரு கவிதை*


என்னை ஈன்ற 

முதல் பெண்ணும் 

என்னை அடைந்த 

முதல் பெண்ணும் 

தராத அன்பையும் 

எனக்கு தந்த

நான் ஈன்ற 

முதல் பெண்ணே 

உன் கன்னம் கிள்ளி 

உன் செல்லம் கொஞ்சிய 

தருணம் என்னுள் 

ஒரு தாயையும் 

இளைய வயதில் 

ஒரு தாயின் அன்பையும் 

தந்த நான் வித்திட்ட 

விதையே 

என்ன தவம் செய்தேன் 

உன் அன்பில் நனைய 

என் அழகிய 

அன்பு மகளே !!!


- பிரபு


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...