•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆
காகத்தின் புலம்பல்
•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆•∆
உணவு வேண்டி நாங்கள் கரை(கூவு)கையில்,
வீட்டில்
திதி நாள் என்றால்,
நாங்களே மூதாதையராம்.
இலையில் பரிமாறிய உணவும்
வகை வகையாய் கிடைக்குமாம்.
எமைப் பார்த்து கும்பிடும்
போடுவாராம்.
அதுவே
வேறு நாட்கள் எனில்,
விருந்தினர் வருவதை
முன்கூட்டியே சொல்லும்
நிமித்தக்காரன்
ஆகிடுவோமாம்.
ஓர் உருண்டை
சோறும் கிடைக்காதாம்.
'சனியனே.. தூரப்போ...'
என வசவு மட்டும் தான்
மிஞ்சுமாம்.
இதனால் எங்கள்
பசி தீருமோ கூறீர்!
மனிதர்களே!
திதி நாள் அன்று மட்டும்தான்
உங்கள் இல்லங்களில்
மூதாதையருக்கு மரியாதையோ..!
பிற நாட்களில்
வேண்டாதவர்கள் ஆகிடுவரோ..?
பதில் உண்டோ
உம்மிடம்!
இருந்தால் பகிர்க எம்மிடம்!!
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment