கலைந்தும் கலையாத காலைப் பனி போல
படர்ந்த இசைவண் ணமே- சங்கத்
தமிழில் நடைப ழகிஎளிய கவிபாடி
வளர்ந்த கவிவண் ணமே!
தமிழில் விளையாடி திரையில்கவி பாடி
வாழ்ந்த எழில்வண் ணமே! - சிறு
கூடல்நகர் தோன்றி சபைகள் பல கண்டு
விளைந்த கவிச் சிற் பமே!
(கலைந்தும்)
சந்தத் தமிழ்கொண்டு கவிதைபல வென்று
ஆளப் பிறந்தாயடா திரையாளப் பிறந்தாயடா
இசைத் தமிழின்சுவை கொண்டு கவிதைபல செய்து
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா!
இசைத் தமிழின்சுவை கொண்டு கவிதை பல செய்து.........
இசைத் தமிழின்சுவை கொண்டு...........கவிதை பல செய்து.........
வாழப் பிறந்தாயடா!
வங்கக் கரையோரம் தங்கமணி மகுடம்
தந்து முடிசூட்டினார் கவி யரசர்பேர் சூட்டினார்!
தமிழ் அன்னை மகனான மன்னன் உனக்காக
சபையில் கதை பேசுவார் சபையில் கதை பேசுவார்!
தமிழ் அன்னை மகனான மன்னன் உனக்காக...........
தமிழ் அன்னை மகனான............... மன்னன் உனக்காக..............
சபையில் கதை பேசுவார்!
தமிழில் விளையாடி திரையில்கவி பாடி
வாழ்ந்த எழில்வண்ணமே! - சிறு
கூடல்நகர் தோன்றி சபைகள் பல கண்டு
விளைந்த கவிச் சிற்பமே!
தெரிந்தசொல் லெடுத்து அறிந்த ராகமதில்
வடித்த கவி சொல்லவா!
மனதில் மறவாத தமிழின் வழிகொண்டு
ரசித்த கவி சொல்லவா....ரசித்த கவி சொல்லவா!
மதியி னொளிபோல ஒளியின்பதம் போல
வாழ்ந்து மறைந்தாயடா -இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா புகழை மறைக்க முடியாதடா!
ம்ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்ம்
முன்பே ஓடிவா ராயோ ஓடிவா ராயோ ஓடிவா ராயடா
இங்கே ஓடிவா ராயோ ஓடிவா ராயோ கவிதைதாரா யடா!!
- திரு
No comments:
Post a Comment