Thursday, July 9, 2026

நம் மனித குலம்

 நம் மனித குலம் 


பாரீர் ! இப் புவிதான் எத்துணை அழகு!

   படுது மனிதன் கையில் படாதபாடு 


ஊரின் கழிவெல்லாம் நதியில் கலக்குது

   உள்ள கனிமங்கள் அள்ளலே இலக்கு


கார் முகிலாய் தொழிற்சாலை புகை விடுது

   காற்றதில் விரவுது *ககனமும் கெடுது


மாரி நீர் போகும் வழி எல்லாம் தடைகளாம் 

   மனிதன் சொல்வது " மழையால் இடையூறாம் "


நீர் நிலைகள் அவை நெகிழியால் நிரம்புது

   நிலத்தில் நஞ்சு சேர்த்து "விவசாயப் புரட்சி" அது 


வேருடன் தருக்கள் பல பிடுங்கப் படுது

   விளைநிலம் வீட்டு மனைகள் ஆகுது


ஏருழும் காளைகள் இடத்தில் இன்று எந்திரம்

   எவ்வாறு வயல் செழிக்க கிடைக்கும் சாணம் 


போர் எனும் போர்வையில் தம்மையே கொல்லும்

   புத்திசாலி இப் புவியில் தாமெனத் துள்ளும் .


    இதுவே நம் " மனித குலம்"


__. குத்தனூர் சேஷுதாஸ் 9/7/2026

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...