*வெயிலே....*
மனிதரில் பெரும்பான்மை
அரைவேக்காடு என்றெண்ணி
முழுதாய் வேகவைக்கும்
*முற்பகல் சமையல்காரரா நீ!*
------------------
*வெயில்…*
போட்ட சட்டையை இரண்டாம் நாள் போடுவோம் என்ற எண்ணத்தில் அன்றாடம் நனைத்துப் போடும்
*சலவைகைகாரனா நீ!*
- தியாகராஜன்
===================================
'பரிதி" எனப்
பாங்கான தமிழ்ப்
பெயர் உனக்கு!
இள வயதிலே
நீயும் எங்கள்
விளையாட்டுத்
தோழன்தான்!
வெளிர் தோலுடன்
வரும் தோழர்களை
மாநிறம் ஆக்கி
அனுப்புவாய்!
நிறம் குறைவான
என்னை விட்டு
விடுவாயா?
அன்னைக்கே
அடையாளம்
தெரியாமல்
அனுப்புவாய்!
முதுமை என்னை
மாற்றி விட்டதா?
இல்லை நீதான்
மாறி விட்டாயா?
பகலில்
அனலாய்க்
கொதிக்கிறாய்.
இரவிலோ
உன்னாலே
உறக்கம் வரா
இரவுகள்!
மரங்களை வெட்டி
மனிதர் நாங்கள்
இயற்கைக்குச்
செய்த மாறை
நன்கே உணரச்
செய்கிறாய்!
ஊழிக் காலத்தே
நீ பனை மர
உயரம் வருவாயாம்!
அக்காலம்தான்
நெருங்கி விட்டதோ!
மாந்தரின் பிழை
பொறுத்து
உன் உக்கிரம்
தணிப்பாயோ!
எங்களைக்
காப்பாயோ !!!
- முகம்மது சுலைமான்
==================================
No comments:
Post a Comment