சர்வதேச சாலையோரச் சிறார் தினத்தில் (12, ஏப்ரல்)...
விசும்பு அதுவே மேலிருக்கும் கூரை
விரிந்த பாயோ வெறும் கட்டாந்தரை
பசி அதுவோ நாளும் பழகிய ஒன்று
பச்சைத் தண்ணீரே வயிறு நிறை சோறு
வசிக்க ஒரு வீடும் வெறும் பகற்கனவு
வந்திடும் பண்டிகை ஒன்றும் தெரியாது
கொசுவும், ஈயும் உடன் வாழும் உறவுகள்
கொள்ளை நோய்களால் நாளும் பிரிவுகள்
உசுரு இவர்களுக்கு இல்லை வெல்லம்
உசுரோடு இருந்தாலே போதும் நாளும்
*நிசியில் சிறுமியர்க்கு பாலியல் தொல்லை
நேர்ந்தது அறியும் முன் வயிற்றில் பிள்ளை
திசையின்றித் தத்தளிக்கும் இந்த நாவாய்கள்
தெருவோரம் காணலாம் பரிதாபச் சேய்கள்
இசைக்கக் காத்திருக்கும் இவர்கள் மூங்கில்
இவரில் துளையிட்டு யார் செய்வார் புல்லாங்குழல்?
*நிசி -- இரவு
__. குத்தனூர் சேஷுதாஸ் 12/4/2026
No comments:
Post a Comment