*கண்ணாமூச்சி*
அனைவரின் கண்களும் கட்டப்பட்ட கண்ணாமூச்சி இது...
எதையோ யாரையோ
தேடி அலைவதற்கான
பயிற்சி இது..
நம்மைத் தேடும் பொருளை
தேடிக் கண்டுபிடிக்கும்
முயற்சி இது...
தேடுபவர்களே தேடப்படுபவர்களாக
கண்டுபிடித்தவர்களே கண்டுபிடிக்கப்பட்டவர்களாக
சுழலும் சுழற்சி இது...
கண்ணாமூச்சி ரே...ரே....
தேடித் தேடியே
விளையாட்டாய் வாழ்க்கை
ஓயும் கண்ணெதிரே...
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment