கலையுருக்காட்டி
என் குடும்பம் - தலைப்பில்
கவிதை எழுதுக: - ஆசிரியர்
அண்ணனின் கவிதை :
ஓயாத ஒலிப்பெருக்கி - அம்மா
தடைபோடும் தனாதிகாரி - அப்பா
குத்துசண்டையிடும் குட்டிசாத்தான் - தம்பி
நாளெல்லாம் நடனமாடும் தங்கை
தினம் ஒரு திட்டு பாட்டி
சதா கைப்பேசியுடன் தாத்தா
கேளிக்கைக் கூடமாய் என் வீடு!!!!
தம்பியின் கவிதை :
ஓய்வின்றி ஓடுபவள் அம்மா
தன்னலமின்றி தானமளிப்பவர் அப்பா
அன்பின் வழியில் அறிவை புகட்டும் அண்ணா
நாள் ஒவ்வொன்றையும் நினைவுகளாய் மாற்றும் தங்கை
திட்டி திட்டியே திண்டுக்கல்லாய் மாற்றும் பாட்டி
தினம் ஒரு தகவற்களஞ்சியமாய் தாத்தா
மட்டற்ற மகிழ்ச்சி தரும் என் வீடு !!!!
கையிலிருந்த கலையுருக்காட்டிக்கும் கவிதைகளுக்கும் உள்ள ஒற்றுமையை நினைந்து வியந்து நின்றாள் தமிழாசிரியரான தாய்......!!!!
No comments:
Post a Comment