Friday, February 13, 2026

பெருமை

 * பெருமை*


     தனையன் வெற்றி         பெற்றால் தாய் தந்தையருக்கு பெருமை!


 பெண் புகுந்த வீட்டில் நல்ல பெயர் எடுத்தால் பெற்றோருக்கு பெருமை!


 அன்பான மனைவி அமைந்தால் கணவனுக்கு பெருமை!!


 பொறுப்பான கணவன் அமைந்தால் மனைவிக்கு பெருமை!!


 மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தால் ஆசிரியருக்கும் பள்ளிக்கும் பெருமை!!


 பூத்துக்குலுங்கினால் பூச்செடிக்கு பெருமை!!


 தண்ணீர் இருந்தால் மட்டுமே தடாகத்திற்கு பெருமை!!


 சிஷ்யன் குருவை மிஞ்சினால் குருவுக்கு பெருமை!!


    காதுக்கு இனிய   இசையானால்  இசைத்தவருக்கு பெருமை!!


 கர ஓசை சபை நிறைய கேட்டால் பேச்சாளருக்கு பெருமை!!


 கலை மாமணி விருது பெற்றால் கலைஞருக்கு பெருமை!!


 கையூட்டு வாங்காதிருந்தால்  அரசு ஊழியருக்கு பெருமை!!


 இவ்வளவு பெருமைகளை கேட்டும் பெருமை தலைக்கு ஏறாமல்  அடக்கமுடன் இருந்தால்  மனிதனுக்கு பெருமை!!

 சிசு

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...