Saturday, February 14, 2026

என்னென்ன நிகழுமோ !

 என்னென்ன நிகழுமோ !


என்னென்ன நிகழுமோ கணிக்க முடியாதாம் 

   எதிர் பாரா பலவும் நாள்தோறும் நடக்குதாம் 


முன்பெலாம் குடும்பமதில் குதூகலம், ஆரவாரம் 

   முழுப் பூசணி சமைத்தும் போதாமல் போகும் 


அன்னம் என்றால் இந்நாளில் பர்கர், பீஸா

   அதையுண்டா பிள்ளை வாய் ஆனது பெருசா ?


தின்னும் தீனிகளும் தேடி வீடு  வருகிறதாம் 

   தேநீர், காப்பி கூட இல்லை விதிவிலக்காம் 


பின்னல்,, குடுமியும் காணாமல் போனதாம்

   பிள்ளை கொள்ளி போட அவசியம் இல்லையாம் 


மின்னலதன் வேகத்தில் பணப் பரிமாற்றம் 

   மிரட்டி கைபேசியதில் கோடிகள் ஏமாற்றம் 


கன்னலாய்ப் பேசிப் பேசி வலைத்தளமே ஈரம் 

   கண்முனே  உறவுகளுடன் பேச இல்லை நேரம்


அண்ணன், தம்பி உறவுகள் இக் காலம் அரிது

   ஆனாலும் வங்கியில் ஆயிரங்கள் விழுது.


__. குத்தனூர் சேஷுதாஸ் 14/2/2026

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...