Friday, June 26, 2026

தன் சாவிற்கு தானே இரங்கற்பா எழுதிய கவிஞன்

 கவியரசுவின் பிறந்த தின பதிவாக முகநூலில் நான் இட்ட பதிவினை பார்த்து எனது நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சிறிது நேரம் அளவளாவிய பின், ஒரு வினாவினைக் கேட்டார். அந்த வினா: 


*தன் சாவிற்கு தானே இரங்கற்பா எழுதிய கவிஞன் யார் என தெரியுமா!*


கவியரசுவை பற்றி பேசிக் கொண்டிருந்ததால் எளிதாக ஊகித்தேன். 


*கவியரசு* என பதில் சொல்லிவிட்டு, அடுத்த கேள்வி அவர் கேட்க முன்னரே, அந்தப் பாடலை நான் படித்ததில்லை என்று பதிலும் கூறிவிட்டேன். 


உடனே, 'கூகுளில் போய் தேடிப் படி' -என சொன்னார். 

அவ்வாறே செய்தேன். 


நீண்டதொரு கவிதை அது. படிக்கையில் ஆச்சரியம் வந்தது.  வியப்பைத் தந்தது.. 

இப்படியும் ஓர் கவியா என மலைப்பு வந்தது.. 


அதிலும் தான் மறைவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே இரங்கற்பா எழுதி வைத்தான் அக்கவிஞன். 


நீண்ட நெடிய இரங்கற்பாவின் கடைசி நான்கு வரிகள் அவனது கவித்திறமை பற்றி அவனுக்கு இருந்த செருக்கினை பகரும். 


அவ்வரிகள் இதோ: 


*கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன் படுத்தவனைக் குவித்துப் போட்டு ஏற்றிய செந் தீயே! நீ எரிவதிலும் அவன்பாட்டை எழுந்து பாடு!*


நிச்சயமாக அவன் உடலை எரித்த போது,  செந்தீ எரியும்போது அவன் பாட்டை எழுந்து பாடி இருக்கும்.


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...