நல் விதை ஒன்று நிலத்தில் விழும்
நிலத்தைக் கிழித்து மேலே எழும்
முளையும் விட்டு இன்னும் உயரும்
இலையும் தோன்றி கணுக்கள் விடும்
செடியாய் உயர்ந்து கிளைகள் பரப்பும்
பாறையே வந்து தடுத்தாலும்
வளைந்து கொடுத்து மேலும் வளரும்.
மரமாய் வளர்ந்து மொட்டும் விடும்
காய் கனியாகி பழுத்து நிற்கும்
உலகே உன்னை எதிர்த்தாலும்
தடைகள் பலவும் செய்தாலும்
உடைத்தெறிந்து முன்னேற
உறுதி கொள்க உழைப்பால் வெல்க
No comments:
Post a Comment