Sunday, June 21, 2026

**பிணியில்லாப் பெருவாழ்வு*

 **பிணியில்லாப் பெருவாழ்வு*


உடலின் நலமே உன்னத செல்வம்!

உயிரின் பிணியிலா நிலையே பேரானந்தம்! 


நாசி இரண்டிலும் நாடி சுத்திசெய்ய,

நாற்றங்கால் சுவாசமாய் நுரையீரலும் சிறக்கும்! 


சிந்தனை நீண்டு நினைவாற்றல் பெருகும்,

சீர்மிகு விடியலில் உற்சாகம் பிறக்கும்! 


பதற்றம் பறந்து மனவழுத்தம் தீரும்,

பரிவோடு அமைதி நெஞ்சினில் ஊறும்! 


சுடரொளிச் சூரிய நமஸ்காரம் செய்ய,

உடலொளி பெருகி உயிர் மலர்ந்துய்யும்! 


வளமிகு வஜ்ராசனம் செரிமானம் கூட்டும்,

வளைந்திடும் புஜங்காசனம் கூனினை மாற்றும்! 


பருத்த வயிறு பச்சிமோத்தாசனத்தில் கரையும்,

பட்ட துயரெல்லாம் பத்தகோணாசனத்தில் மறையும்! 


அருந்தலைக்கு ரத்தமேகும் அதோமுக ஆசனம்,

ஆரோக்கியம் சேர்க்கும் நரம்பினில் மோகனம்! 


சலனங்கள் தீர்த்திடும் சவாசன நிலை,

சகலமும் தந்திடும் சாந்தியாசனக் கலை! 


கைபேசி விடுத்து முன் தூங்கிமுன் எழுவோம்,

நாளும் யோகத்தால் நூறாண்டு வாழ்வோம்!


*சர்வதேச யோகா தினத்தைக் கருத்தில் கொண்டு -வே.திருஞானசம்பந்தம்*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...