Saturday, June 20, 2026

தந்தையர் தினம்

 முட்பாதைகளில்

பாதம் பதித்து

வலிகளை உள்வாங்கி

பிள்ளைகளுக்கு 

வழிகள் உருவாக்கும் 

தந்தைகளுக்கு

தந்தையர் தின வாழ்த்துகள்


- அமுதவல்லி

==========================


•••••••••••••••••••••••••

       ஜூன் 21 

 தந்தையர் தினம்              ••••••••••••••••••••••••••


கரடு முரடான பாதையிலே 

கஷ்ட நஷ்டம் ஏதுமின்றி 

குடும்பம் முழுதும் பயணிக்க 


மெழுகாய் உருகி ஒளி சிந்தும் 

கழுகாய் சுற்றி இன்னல் கொடுக்கும் 

துன்பங்களை துரத்தி அடித்து,


பொழுதெல்லாம் உழைத்து ஓயும் 

குடும்ப நலனை தன் நலமாக்கும்

தியாகச் செம்மல் தந்தையர் தாமே!


தனக்கு ஏதும் இல்லை எனினும் 

நமக்காக எல்லாம் செய்து 

உழைத்து ஓய்ந்த தந்தையர் வாழ்க!


குழந்தையின் காலில் பாட்டா ஷூக்கள் 

தந்தையின் காலில் தேய்ந்த செருப்பு 

அவர்தம் மனதில் பொங்கிடும் மகிழ்வு 


பிள்ளைகளுக்கோ பளபள சட்டை

தகப்பனுக்கோ சட்டையும் கந்தை

சுமைதாங்கியாய் உழைக்கும் நிகழ்வு


பசியறியாது பிள்ளைகள் வாழ 

கசியும் கண்ணுடன் உழைப்பான் தந்தை 

பாரம் சுமக்கையில் அடையான் தளர்வு


கல்வி கொடுக்க கரன்சி நோட்டுகள் 

வாழ்வில் வென்றிட அவையே ஓட்டுகள் 

கடனாளி ஆகி தருவான் உயர்வு


இத்தனை செய்தும் பெயர் இல்லை 

வாழ்த்தி மகிழ மனம் இல்லை

ஏன் இப்படி இருக்குது உலகு!


அன்னையர் புகழை அவனியே பாடும் 

மகளிர் புகழை போற்றி ஆடும் 

தந்தையர் மட்டும் அந்தோ பாவம்! 


தந்தையர் தம்மை போற்றி மகிழ்வோம் 

சிந்தை குளிர வாழ்த்துச் சொல்வோம் 

தந்தையர் தின வாழ்த்துகள்!


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*


==========================

புதிரான உறவே அப்பா


கதிரவனோடு அதிகாலை புறப்படுவார்

   கரும்புச் சக்கையாய் வீடு திரும்புவார் 


மதிய உணவு உண்டாரா அவருக்கே வெளிச்சம் 

   மனது அது சுமப்பதோ கழுதையும் விஞ்சும் 


புதிய பொருட்களால் கவரப் படார்

   போதும் உள்ளதெனக் கடந்து போவார் 


" *பதி " அவரே இல்லத்தின் எனப் படுவார்

   பால் காய்ச்சி முதல் காபி "*சதி"க்கு ஈவார்

   

அதிகமாய் பிள்ளைகளிடம் பேச மாட்டார்

   ஆண்பிள்ளை என்றால் அறவே மாட்டார் 


உதிரமாய் உள்ளிருந்து ஓடச் செய்வார் 

   உலகுக்கு தன் அன்பை வெளிக் காட்டார்


முதுமையில் மைந்தனின் உடையே போதும் 

   முணுமுணுப்பு மனைவியின் மூழ்கிப் போகும் 

   

புதிரான உறவு தான் "அப்பா " என்பார் 

   பூ அதைக் காக்கும் முள்ளை ஒப்பார்.

                

        " இவர் தான் அப்பா " 


* பதி -- தலைவர் 

*சதி -- மனைவி 

__. குத்தனூர் சேஷுதாஸ் (21/6/2026)

====================


Fathers Day 21.6.26

௭னது  சில வரிகள் :-


          ௮ப்பா:

இந்த ௨லகத்தை நோக்கி நான் ஒ௫ பெரிய குற்றத்தை சுட்டிக்காட்டுகிறேன்.


௮ம்மாவை கொண்டாடும் ௮ளவுக்கு ௮ப்பாவை கொண்டாடுவதில்லையே   ஏன்?


௮ன்பை வெளிக்காட்டத்தெரியாத ௮ப்பாவியான ௮ப்பாக்கள், பாசம் ௭ன்ற ஓட்டப்பந்தயத்தில் ௮ம்மாவுக்கு ௮டுத்தபடியாக ௭ப்போதும் இரண்டாம் இடத்தையே(runner up) பெறுகிறார்கள்.


௨ள்ளத்தில் கரடு முரடாக தோன்றும் ௮ப்பாக்கள் , பிள்ளைகளின் முன்னேற்றம் பற்றியே ௭ண்ணி ௭ண்ணி வாழ்க்கையை முழுமையாக (௮ம்மாக்கள் போல் ஜாலியாக இல்லாமல்)

வாழ மறந்து போய் விடுகிறார்களோ ௭ன்று ௭ண்ணத்தோன்று

கிறது.


௮ம்மாக்களை விட ௮ப்பாக்களுக்கே ௮திகமாக ஹார்ட் ௮ட்டாக் வ௫வது இதனால்தானோ.!!!


கடவுள் ௭ல்லா இடத்திலும் இ௫க்க முடியாது ௭ன்றே ௮ம்மாவை படைத்தான் ௭ன்று சொல்வார்கள்.

இதிலும் ௮ப்பாக்களுக்கு பின்னடைவே.!!


தாயிற்சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ௭ன்பார்கள். 


ஆமாம்,

கடமை ௭ன்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தன் வாழ்நாளை கழித்து விடுகிறார் ௮ப்பா.!


௮ப்பா, 

நான் benz காரில் சவாரி செய்யும்போது கிடைக்கும் சுகத்தை விட, சிறு வயதில் ௨ங்கள் முதுகில் செய்த யானை சவாரியின் சுகமே மிகப் பெரியது ௮ப்பா.!!


இன்றைக்கும் நான் ௭ங்கு சென்றாலும், ௭ந்த நாடு சென்றாலும், ௭ந்த ஊர் சென்றாலும்

௨ங்கள் முக சாயலில் யாரேனும் தென்படுகிறார்களா ௭ன்று தேடிக்கொண்டே இ௫க்கிறேன் ௮ப்பா.


மீண்டும் வ௫வீர்களா ௮ப்பா.!!!


Happy Fathers Day.🌹


          A. Ravi , BSNL

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...