Wednesday, June 24, 2026

"குவாகுவா" என இந்நாள் (24/6/1927)

 "குவாகுவா" என இந்நாள் (24/6/1927)


எவராலும் எட்ட முடியாச் சிகரம் தொட்டது

   "ஏன் பிறந்தாய் மகனே?" எனவும் கேட்டது


அவா அதற்கோ "அழியாச் சிறப்பு "

   அழகிய "சிறுகூடல்பட்டி" யில் பிறப்பு 


சிவாஜி, எம்.ஜி. ஆரைச் சீராட்ட வைத்தது 

   "சிவகங்கைச் சீமை" சிலை செதுக்கியது


தெவிட்டாதத் திரைப் படப் பாடல் பல்லாயிரம் 

   தீந்தமிழ் மகுடம் அம்மணிகளால் ஒளிரும்  


"தவறான வாழ்வுக்கு நானே உதாரணம்" 

   தானே எழுதிய‌ அந் நூலோ "வனவாசம்"


"வதவத" என வித்திட்ட பிள்ளைகள் பதிமூன்று 

   வாங்கியது உயர் சாகித்திய அகாதமி விருது 


கவலைகள் கரைந்தோடப் பொழிந்த கவி மேகம் 

   கண்ணனே எல்லாமெனும் "கிருஷ்ண கானம்" 


"குவாகுவா" என இந்நாள் (24, ஜூன்) அக் குழவி பிறந்தது 

   * குவலயம் கண்ணதாசனை என்றும் மறவாது.


* குவலயம் -- உலகம் 


வாழ்க கவியரசு கண்ணதாசன் புகழ் ! 💐🙏


__. குத்தனூர் சேஷுதாஸ் 24/6/2026

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...