Sunday, June 7, 2026

*ஜூன் 7 நடந்த குழந்தைகளுக்கான சொல் வேந்தர் மன்றத்தின் விவரணம்*

 *ஜூன் 7 நடந்த குழந்தைகளுக்கான சொல் வேந்தர் மன்றத்தின் விவரணம்*


நல்ல துவக்கம். 

வந்திருந்த குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றது *சொல்வேந்தர் மன்றம்* பெரும் வெற்றி பெறும் என்பதற்கு கட்டியம் கூறுகிறது. 


இடம்: ஜாமிங் ரூம், பன் பயன்பாட்டு பெருவரங்கம் (MPH)

நேரம்:  மாலை 6 to 7


நிகழ்ச்சியின் தொடக்கமாக  திருமதி. மகாலட்சுமி அவர்கள், குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும், பேசும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன, பேச்சுக்கான தகவல்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் போன்ற கேள்விகளை எழுப்பி நிகழ்ச்சியைத் தொடங்கினார். மேடைப் பேச்சு இருக்கானா சில வழிமுறைகளையும் கூறி வழிகாட்டினார். குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து திருமதி. தேவி அவர்கள், பேச்சின் அடிப்படை அம்சங்கள் மற்றும் ஒரு பேச்சை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் நமது தமிழ் சங்கத் தலைவர்  திரு. ஸ்ரீவி   ஐயா அவர்கள் உரையாற்றினார்.

பள்ளியில் பேசும்போதும்,  நம் சங்கத்தில் பேசும்போதும் எப்படி இருந்தது போன்ற கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை குழந்தைகளிடம் இருந்து பெற்றார், பேச்சின் வகைகள் குறித்தும் உரை ஆற்றினார். 


குழந்தைகள் அனைவரும் தங்களைப் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை அனைவரின் முன்னிலையிலும் தன்னம்பிக்கை உடன் தெளிவாக வழங்கினர்.


எதிர்கால நிகழ்வுகள் குறித்து குழந்தைகளுக்கு தகவல்கள் வழங்கப்பட்டன. மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறை “சொல்வேந்தர் மன்றம்” நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.


 திரு. சாய் ராம் ஐயா மற்றும்  திரு.தியாகராஜன் ஐயா  அவர்கள் ஆகியோர் பேசும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய அழகான கருத்துகளை ரத்தின சுருக்கமாக பகிர்ந்து கொண்டனர்.


நிறைவாக, நித்தின் அவர்கள் தானே முன்வந்து நன்றியுரை வழங்கினார்.


சிறார்களுக்கு மட்டுமல்ல நம் தமிழ்ச் சங்கத்திற்கும் ஒளிமயமான எதிர்காலம் இவர்கள் மூலம் உருவாகப் போகிறது என்பது உறுதியாகிறது. 


பெற்றோர்களில் சிலர் வந்திருந்து, கூட்டம் நிறைவுறும் வரை இருந்து ஆலோசனை நல்கியதும் குறிப்பிடத் தக்கது. 


நமது மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் மணிமகுடத்தில் ஒளி வீசும் வைரமாக இந்த சொல்வேந்தர் மன்றம் நிச்சயம் திகழும். 


பொறுப்பாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும்,  கலந்து கொண்ட சிறார்கள் அனைவருக்கும் நமது சங்கம் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறது.


 (7/6/26) சொல்வேந்தர் மன்றத்தில் பங்குபெற்ற குழந்தைகள்:


   1. நிவர்ஷனா

2. பிரதிகா

3. மஹாலக்ஷ்மி 

4. சந்தோஷ்

5. திருவிக்ரம் 

6. ஜனனி 

7. சாதனா 

   8. நிதின் 

9. அர்மான் 

10. ஹர்ஷிதா

  11.  அகரன்

12. அர்ஃபா 

13. ஆதவன் 

14. ஆராதனா 

15. சைந்தவி 

16. ரித்தின்

17. யாழினி 

18. தனிஷ்கா


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...