Sunday, May 24, 2026

ஓநாய்கள் உஷார்!

 ஓநாய்கள் உஷார்!


சிறகடிக்கத் துடிப்பதே இளம் பிராயம் 

   சின்னச் சின்ன ஆசைகள் அது அடுக்கும்

   

சிறுமியரை வளர்ப்பது இல்லை சுலபம் 

   சீரழியும் சமுதாயம் செய்யும் கலகம் 


வறுமையது சேர்ந்தால் இன்னும் மோசம் 

   வஞ்சகமோ வலையதை எளிதாய் வீசும் 

   

வெறி பிடித்த ஓநாய்கள் திரியும் இந்நாளில் 

   விளையாடும் ஆட்டு குட்டி ‌‌பாதுகாப்பு (நம்) தோளில் 


அறியாச் சிறுமிகளே ஆட்டுக் குட்டிகள் 

   அணையாத காமத் தீயார் ஓநாய்கள் 


குறி வைத்துச் சிறுமியரைக் கொண்டு போவார் 

   குலை நடுங்கும் பாதகம் பின் கொன்று போடுவார் 


பறி கொடுத்த பெற்றோர் நிலை எத்தனை கொடுமை

   பாதகமது ஒருபோதும் குறையவே இல்லை 


முறிந்தால் போதாது அவன் கையும், காலும் 

   மூளையிலாத் தலையும் கொய்ய வேண்டும். 


__ ‌குத்தனூர் சேஷுதாஸ் 24/5/2026

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...