உலக செவிலியர் தின வாழ்த்து!
வெள்ளுடை போர்த்திய விண்மகளீர்!
விடியலை வார்க்கும் தேவதையீர்!
வேதனை விரட்ட புன்னகைப்பீர்!
விண்ணின் கருணையாய் பொழிந்திடுவீர்!
நோயாளியை நாடி, நாடி பிடிக்கும்
மருத்துவ உலகின் நாடித் துடிப்பு!
வலியில் துடிக்கும் உயிர்க்கு எல்லாம்
வழிகாட்டி நிற்கும் கை காட்டி !
உள்ளங்கையின் மென்மை தீண்டிடவே
ஊசியின் கூர்மையும் மழுங்கிடுமே!
உவகை மொழியின் இனிமை கேட்டு
உயிரின் உளைச்சல் குறைந்திடுமே!
உறவுகள் உள்வர மறுக்கும்
உயிர்ப்போர் அவசர அறைகளிலே
உலுக்கும் அச்சம் உறையும் வேளையிலே
உறுதியாய் தொட்டது உன் கரங்கள்!
பிறக்கும் பிஞ்சின் முதல் துடிப்பும்
பிரியும் உயிரின் கடைசி துடிப்பும்
இரவும் பகலுமென இணை பிரியா!
இரண்டிலும் உந்தன் இறை கரங்கள்!
நள்ளிரவு முழுதும் சேவை தரும்
நடையே அடைக்கா நல் தெய்வம்!
வலியில் அழுது வார்த்தை வறண்டாலும்
விழிகள் பனிக்கும் உன் பணிவிடையால்!
- திருஞானசம்பந்தம்
=======================================
அகிலமெங்கும் அனைவரும்......
கண்ணால் பார்க்க கூடிய.......
வெள்ளை உடை தேவதைகள்......
செவிலியர்கள் மட்டுமே 🙏💐🙏🩷😊🙏
- சாய் ராம்
-----------------------------------
No comments:
Post a Comment