இராஜதந்திரம்
இன்று. உலகமே போர் மேகங்கள் ,இல்லை இல்லை போர் சூறாவளியில் சிக்கித்தவிக்கிறது. எங்கோ அடிக்கிறார்கள், இங்கு சமையல் செய்ய எரிபொருள் தட்டுப்பாடு!
இன்னும் இணைசேதம்( collateral damage) வேறு. ஒரு பாவமும் அறியா 150 பள்ளி சிறார்கள் மாண்டுபட்ட காட்சி இன்னும் நெஞ்சை நடுங்க வைக்கிறது.
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா? இராஜ தந்திரம் எங்கு சென்று ஒளிந்தது?
இன்று இது சம்பந்தமாக,ஒரு ஆங்கிலப்பதிவை ஓர் ஆங்கிலப்பத்திரிகையில் பார்த்தேன். அதன தாக்கம்தான்
இந்தப்பதிவு.
தகடூரை ஆண்ட அதியமானுக்கும் , காஞ்சியை ஆண்ட தொண்டைமானுக்கும்பகை. போர் மூளும் தருணம். அதியமானின் அவையை அலங்கரித்தவர் ஔவையார். அவர் தொண்டைமானிடம் தூது செல்கிறார். அவன் பெருமையுடன் அவன் படைக்கலங்களைக் காட்டுகிறான்.எல்லாம் "நெய் பூசி" பளபள என மின்னுகின்றன.ஔவையார் கூறுகிறார்:
"என் தலைவன் அதியமான் பயன்படுத்திய வேல்கள்
பகைவரைக் குத்தி,
நுனி ஒடிந்தும் மழுங்கியும் சிதைந்து,
செப்பம் செய்வதற்காகக்
கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன.உன்னிடம் படை இருக்கிறது.
வீரர்களின் பயிற்சி இல்லை
என் தலைவனிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் வீரர்கள் மிகுதிமக்களுக்கும் அவனுக்கும் நெருங்கிய உறவு.
போர் என்றால் அவனைவிட அவன் மக்கள் முன்வந்து நிற்பர்."என்கிறார்.
தொண்டைமான் விவரமானவன்; புரிந்து கொண்டான். போர்செய்யவில்லை!
புறநானூறு பாடல் 95(நீண்ட பதிவு காரணமாக பாடல் பதிவு செய்யவில்லை. நூலகம் சென்று படிக்க வைக்க ஓர் உத்தி!!)
என்னே ஒரு இராஜ தந்திரம் மக்களே!
இந்திய வெளியுறவுத்துறைப்பணியில் பயிற்சி இல்லாது எண்ணங்களாலும், எழுத்தாணியினாலும் உலகை மாற்றியவர்🙏🙏
இவரைப்போன்றவர்கள் எங்கு போனார்கள்? கடற்கரையில் சிலையாக நிற்கிறார்களே!
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய்அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
கொல் துறைக் குற்றில மாதோ என்றும் 5
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே.
No comments:
Post a Comment